பெண்கள் பாதுகாப்பை பேணும் இந்தியாவின் 5 சுற்றுலா தளங்கள்...

இந்தியாவின் சில பகுதிகள் பெண்களின் பாதுகாப்பின் பார்வையில் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. 

Last Updated : Feb 2, 2020, 05:30 PM IST
பெண்கள் பாதுகாப்பை பேணும் இந்தியாவின் 5 சுற்றுலா தளங்கள்... title=

இந்தியாவின் சில பகுதிகள் பெண்களின் பாதுகாப்பின் பார்வையில் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. 

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் இடங்கள் யாவை என்று இந்த பதிவில் இன்று நாம் விவாதிக்க இருக்கிறோம். இதில் ரிஷிகேஷ் (உத்தரகண்ட்), ஹம்பி (கர்நாடகா), ஜீரோ பள்ளத்தாக்கு (அருணாச்சல பிரதேசம்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), புதுச்சேரி, இந்த நகரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன.

  • இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கும் இடம், கங்கையின் சிலிர்ப்பு மற்றும் மலைகளுக்கு இடையிலான அமைதி பற்றிப் பேசினால், ரிஷிகேஷ் என்பது நம் மனதில் முதலில் வரும் பெயர். நீங்கள் சாகசத்தை விரும்பினால், ரிஷிகேஷுக்குச் செல்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். மேலும் தனிநபர் பயணத்திற்கு ரிஷிகேஷ் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
  • தனிநபர் பயணிகளுக்கு மிகச் சிறந்த இடமாகக் கருதப்படும் மற்றொரு இடம் கர்நாடகாவின் ஹம்பி. இந்த நகரத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் கட்டிடக்கலை மற்றும் அழகான நிலப்பரப்பு மக்களை மிகவும் ஈர்க்கிறது. இங்கே நீங்கள் பாறை ஏறுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது துங்கபத்ராவின் கரையில் நேரத்தை செலவிடல் என பல விஷயங்களை மேற்கொள்ளலாம்.
  • இந்த பட்டியலில் ஜீரோ பள்ளத்தாக்கின் பெயர் மூன்றாம் இடத்தில் வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் இது ஒரு அழகான பள்ளத்தாக்கு, இது 'ஜீரோ வேலி' என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு செல்வோர் இதை சொர்கம் என்று அழைக்கிறார்கள். தனி பயணிகளுக்கு இந்த இடம் மிகவும் பாதுகாப்பானது. இங்குள்ள மிகவும் பிரபலமான இசை விழாக்களில் ஒன்றான ஜீரோ ஃபெஸ்டிவலும் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும்.
  • நான்காவது இடத்தில் ராஜஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி அறியப்படுகிறது. இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகவும் கருதப்படுகிறது. ஜெய்ப்பூரில், ஹவா மஹால், ஜல் மஹால், நஹர்கர் கோட்டை, அமர் கோட்டை, ஜந்தர்-மந்தர், சிட்டி பேலஸ், கல்தாஜி, பிர்லா கோயில், கர் கணேஷ் கோயில், ஜெய்கர் கோட்டை, ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மற்றும் கோவிந்த் தேவ்ஜி கோயில் போன்ற இடங்கள் உள்ளன. இந்த இடம் பயணத்தின் முக்கிய மையமாக கருதப்படுகிறது.
  • புதுச்சேரி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடங்களில் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் வருகிறது, இது பெண்களுக்கு மிகவும் சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. இங்கே நீங்கள் சாகச விளையாட்டு, அழகான இடங்கள் மற்றும் சுவையான உணவையும் அனுபவிக்க முடியும். இந்த ஐந்து இடங்களும் பெண்களின் தனி பயணங்களுக்கு மிகவும் சிறந்தவை. நீங்களும் ஒரு தனி பயணத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், நிச்சயமாக இந்த இடங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

Trending News