திருப்பதி: நேற்று திருமலை பாலாஜி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 3.37 கோடி வசூலாகியுள்ளதாக ஒரு தகவல்.
வெங்கடேஸ்வரர் கோயிலான திருப்பதி அமைந்திருக்கும் மலைஸ்தலமும், அதைச்சுற்றியுள்ள மலைப்பகுதிகளும் திருமலா என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந்து நிற்கின்றன. ஆதிசேஷனின் வடிவாக கருதப்படும் இந்த சிகரங்கள் நாராயாணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி மற்று வெங்கடாத்ரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ஆந்திராவில் திருமலா திருப்பதி கோவிலில் அனுதினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மட்டுமே 86,028 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் சாமியை தரிசனம் செய்ய காத்திருக்கும் "Q" பகுதியில் 27 கம்பார்மென்ட் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது தோராயமாக 18 மணி நேரம் வரை சாமியை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 45,637 பக்கதர்கள் மொட்டையடித்துக் கொண்டனர்.
நேற்று திருமலை பாலாஜி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 3.37 கோடி வசூலாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.