மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சிறந்த வழிமுறைகள்...

நவீன வாழ்க்கையில் நம் உடல் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற கோளாறுகளை சந்திபதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பல காரணங்களால் ஒவ்வொரு நபருக்கும் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மன அழுத்தத்தை சமப்படுத்த சில பயனுள்ள வழிகளை இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Last Updated : Jun 28, 2020, 08:36 PM IST
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க சிறந்த வழிமுறைகள்... title=

நவீன வாழ்க்கையில் நம் உடல் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற கோளாறுகளை சந்திபதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பல காரணங்களால் ஒவ்வொரு நபருக்கும் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மன அழுத்தத்தை சமப்படுத்த சில பயனுள்ள வழிகளை இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

உடற்பயிற்சி: நீங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க விரும்பினால், ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள், அது தான் உடற்பயிற்சி. தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. உடற்பயிற்சி மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மனநிலை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உடலில் உள்ள நல்ல ஹார்மோனை வெளிக்கொண்டு வருகிறது.

ALSO READ | தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?... மருத்துவ குழுவுடன் EPS ஆலோசனை..!

வாழ்க்கை முறையில் மாற்றம்: உங்கள் உடலையும் மூளையையும் அமைதிப்படுத்த விரும்பினால், தூங்குவதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரம் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனை ஒதுக்கி வையுங்கள். சூடான நீரில் அல்லது குளிர்ந்த நீரில் முழுமையான குளியலை எடுத்துக்கொள்வது, புத்தகத்தைப் படிப்பது, இனிமையான இசையைக் கேட்பது, தியானிப்பது மன ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எல்லாவற்றையும் சாப்பிடும் பழக்கத்தை கைவிடுங்கள்:  நள்ளிரவுக்குப் பிறகு நிக்கோடின் அல்லது காபி போன்ற தூண்டுதல்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால். மது அருந்தும் பழக்கத்தை மறந்து விடுங்கள்.

குளிரான வெப்பநிலையில் கவனம் செலுத்துங்கள் : இரவில் தூங்குவதற்கு முன் உங்கள் படுக்கை மற்றும் தலையணைகள் வசதியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், அறை வெப்பநிலையை 60 முதல் 67 டிகிரி பாரன்ஹீட் வரை வைத்திருங்கள். இந்த வெப்பநிலை உடலுக்கு சிறந்தது. உங்கள் படுக்கையறையில் தொலைக்காட்சியை பயன்படுத்த வேண்டாம். உங்கள் மூளைக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால் கணினி போன்றவற்றை இரவு நேரத்தில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

ALSO READ | 1 கோடியே 25 லட்சம் வேலை வாய்ப்பை அளிக்கும் UP வேலைவாய்ப்பு திட்டத்தை அறித்த PM Modi...

இரவில் அதிகம் வெளிச்சம் தேவையில்லை: உங்கள் அறையில் உள்ள அனைத்து பிரகாசமான விளக்குகளையும் அகற்றவும். ஏனெனில் செல்போன் அல்லது மடிக்கணினியின் நீல ஒளி கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு சிரமமாக இருந்தால், கண்களை ஒரு கருப்பு திரைச்சீலை கொண்டு மறைத்துக்கொள்ளுங்கள்.

Trending News