வீட்டிலிருந்தே இ- வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி? எளிய வழிமுறை

இ- வாக்காளர் அடையாள அட்டை (eAPIC) இணைய தளம் மூலம் வீட்டில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூன்று வழிகளில் இ- வாக்காளர் அடையாள அட்டை பெறலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 07:10 PM IST
  • இப்போது வாக்காளர் அடையாள அட்டை பெறுவது மிகவும் எளிதாகிவிட்டது.
  • மூன்று வழிகளில் இ- வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.
  • e-EPIC என்பது ஒரு வகை கையடக்க ஆவணம் ஆகும்.
வீட்டிலிருந்தே  இ- வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி? எளிய வழிமுறை title=

Digital Voter ID card: வாக்காளர் அடையாள அட்டை (Voter ID card) பெறுவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. எங்கும் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை PDF கோப்பு வடிவத்தில் பெறலாம். அதில் ஒரு QR குறியீடும் இருக்கும். உங்கள் தகவல் பாதுகாப்பானது  என உறுதிப்படுத்தப்படுகிறது.

இ- வாக்காளர் அடையாள அட்டை (eAPIC) இணைய தளம் மூலம் வீட்டில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூன்று வழிகளில் இ- வாக்காளர் அடையாள அட்டை பெறலாம். அதாவது voterportal.eci.gov.in என்ற இணைத்தளம் மூலமாகவும், இரண்டாவது- nvsp.in மற்றொரு இணைத்தளம் மூலமாகவும், மூன்றாவதாக வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியைப் பார்வையிடுவதன் மூலம் (பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்) பெறலாம்.

e-EPIC (Electors Photo Identity Card) என்பது ஒரு வகை கையடக்க ஆவணம் ஆகும். அதை நீங்கள் மொபைல் அல்லது கணினியிலிருந்து பிரிண்டர் மூலம் பதிவிறக்கலாம். அடுத்து அதை லேமினேட்டு செய்து வைத்துக்கொள்ளலாம்.

இ- வாக்காளர் அடையாள அட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது?

Voterportal.eci.gov.in இணைத்தளத்தில் நுழைக.

இப்போது இங்கே முகப்பு பக்கத்தில் e-EPIC விருப்பம் இருக்கும்.

e-EPIC என்பதைக் கிளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடவும், அதன் பிறகு OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும்.

OTP உள்ளிட்ட பிறகு, உங்கள் இ- வாக்காளர் அடையாள அட்டை தோன்றும். 

இப்போது அதை பதிவிறக்கவும் செய்யவும்.

ALSO READ | வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் வாக்களிப்பது எப்படி?

nvsp.in தளத்தில் இ- வாக்காளர் அடையாள அட்டை எப்படி பதிவிறக்கம் செய்வது?

நீங்கள் nvsp.in உள்நுழைய வேண்டும். அங்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

EPIC எண்ணை உள்ளிடவும் அல்லது படிவ குறிப்பு எண்ணை நிரப்பவும்.

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட OTP ஐ சரிபார்க்கவும்.

இப்போது e-EPIC ஐ பதிவிறக்கிக் கொள்ளலாம். 

முதலில், மூன்று இடங்களிலும் பதிவு செயல்முறைகளை முடிக்கப்பட வேண்டும், அதன் பிறகு நீங்கள் உங்கள் விவரங்களை கொடுக்க வேண்டும். பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இந்த செயல்முறை தொடர்பான அப்டேட் கிடைக்கும்.

ALSO READ | Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி!

இதுமட்டுமின்றி, nvsp போர்ட்டலில் உங்கள் விண்ணப்பத்தின் நிலையையும் சரிபார்க்கலாம். nvsp போர்ட்டளை ஓபன் செய்தபிறகு, Track Application Status நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஒரு குறிப்பு ஐடி கேட்கப்படும், அதை உள்ளிட்டவுடன், அதன் பிறகு உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் நிலையை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News