பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஸ்விகி ஊழியர். அந்த பெண்ணுக்கு இழப்பீடாக 200 ரூபாய் கூப்பன் வழங்கியுள்ளது!!
தற்போதைய காலகட்டத்தில் உணவு என்றவுடனே நமது நியாபகத்திற்கு வருவது ஆன்லைன் உணவு நிறுவனங்கள் மட்டும் தான். அதிலும், குறிப்பிட்டு நமது நியாபகத்திற்கு உடனே நினைவில் வருவது ஸொமாட்டோ, ஸ்விஃக்கி, ஃபுட் பாண்ட தான். தனியாக தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கு இது ஒரு வரபிரசாதம் என்றும் கூறலாம்.
இந்நிலையில், பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த ஸ்விகி நிறுவனம் 200 ரூபாய் கூப்பன் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு உணவு பொருட்களை வீடு தேடிச் சென்று ஸ்விகி நிறுவனம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து, பெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் உணவு பொருட்களை வழங்கிய ஸ்விகி நிறுவன ஊழியர் கைகைளை பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆப் மூலம் ஸ்விகி நிறுவனத்திற்கு புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்விகி நிறுவனம் உணவு பொருட்கள் வாங்க இலவசமாக 200 ரூபாய் கூப்பன் ஒன்றை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அனுப்பியுள்ளது. ஸ்விகி நிறுவனத்தின் இந்த செயல் அந்த பெண்ணை மேலும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டேலிவரி பாய் கொடுத்த உணவை சாப்பிட பிடிக்காமல் குப்பையில் வீசி எறிந்ததாகவும் வேதனையுடன் அவர் கூறியுள்ளார்.