ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்?

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

Last Updated : Oct 10, 2018, 12:19 PM IST
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்? title=

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ரயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்டதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending News