இந்த தேதியில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும், டபுளாக சம்பளம் உயரும்

7th Pay Commission DA Hike: மத்திய ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 22, 2023, 07:53 PM IST
  • ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது.
  • 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும்.
  • சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த தேதியில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும், டபுளாக சம்பளம் உயரும் title=

7வது ஊதியக் குழுவின் அகவிலைப்படி உயர்வு அப்டேட்: நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்கான அவர்களின் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி வரும் நவராத்திரி பூஜை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற பெரிய பரிசை வழங்கக் கூடும்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் (Central Employees) முக்கியக் கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக சமீபத்திய அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் மூலம் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தக் கூட்டத்தில், அகவிலை நிவாரணம் மற்றும் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுக்கலாம். இது நடந்தால், நவராத்திரிக்கு முன் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு பெரிய பரிசாக இருக்கும்.

மேலும் படிக்க | KBC 15: கோன் பனேகா குரோர்பதி? 6 கோடி ரூபாயை ஒரு சில நொடிகளில் இழந்த ஐஸ்னில் குமார்!

7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission Update) அடிப்படையில், பணவீக்கத்தால் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்வில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாத வகையில், மத்திய அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியைத் திருத்துவது (Dearness Allowance) வழக்கம். இது எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம், ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு ஜனவரி முதல் மற்றும் இரண்டாவது அறிவிப்பு ஜூலை மாதம் அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்க புள்ளிவிபரங்களை வைத்து பார்த்தால், இந்த முறையும் நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என்று மத்திய ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது நடந்தால், அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும்.

உண்மையில், தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட AICPI (All India Consumer Price Index) தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்கிறது. 2023 ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் பாதியில் AICPI புள்ளிவிவரங்களில் மீண்டும் ஒரு பெரிய அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு 46.24 சதவீத அளவை எட்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும் என மத்திய ஊழியர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக, அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஊழியர்கள் தற்போது 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதற்கு முன்னர் மார்ச் மாதத்தில் டிஏ அதிகரிக்கப்பட்டது, இதன் விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டன.

ஒரு ஆண்டில், ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. அந்த வகையில் தற்போது அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஜூலை 2023 -க்கான அகவிலைபப்டி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும். அதிகரித்த அகவிலைப்படி ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இதன் மூலம் பயனடையும். ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய பரிசாக இருக்கும். இதை விரைவில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். 

மேலும் படிக்க | IRCTC தட்கல் ஆட்டோமேஷன் டூல் மூலமாக சட்டென்று ரயில் டிக்கெட்டை புக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News