ஜோதிர் லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்று பொருள். சிவபெருமான் ஒளி வடிவில் லிங்கத்தில் இருந்து உலகிற்கு அருள் பாலிப்பதாக நம்பப்படுகிறது. மொத்தம் 12 சிவாலயங்கள் ஜோதிர் லிங்கங்களாக அறியப்படுகின்றன.
பன்னிரெண்டு ஜோதிர் லிங்கத் தளங்களும் எங்கே அமைந்துள்ளன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்
காசியில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்து, ராமேஸ்வரத்தில் ஈசனுக்கு அபிஷேகம் செய்வது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. ராமேஸ்வரத்தில் மட்டும் தான் கடலில் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்ததால் சிறப்பு பெற்ற தலம் ராமேஸ்வரம், இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கத் தலத்தில் ராமருக்கும் சிறப்புண்டு. அதனால் தான் இந்த ஊரின் பெயரும், ஆலயத்தின் பெயரிலும் ராமரும் இடம் பெற்றிருக்கிறார்.
2. அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம்
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற தலம். இங்கு நந்தியே மலையாக இருந்து சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தி என இருவரை இங்கு தான் மணந்ததாக நம்பப்படுகிறது.
3. அருள்மிகு பீமசங்கரர் திருக்கோயில்
மஹாராஷ்டிர மாநிலம் பீமாசங்கர் கோவிலில் கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை அமைந்திருக்கிறது.
4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்
மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். கருவறையில் எப்பொழுதும் நீர் சுரந்துக் கொண்டே இருக்கிறது. சிவனே மலையாக இருக்கும் தலங்களில் இதுவும் ஒன்று. கோதாவரி நதி இங்கு தான் உற்பத்தியாகிறது.
5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர் திருக்கோயில்
மஹாராஷ்டி மாநிலத்தில் அமைந்துள்ள குஸ்ருணேஸ்வரர் ஆலயத்தில் அன்னை பார்வதி குங்குமப்பூவால் ஈசனை வழிபட்டார்.
6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்
குஜராத்தில் அமைந்துள்ள கடற்கரை தலம் இது. சந்திரன் சாபம் தீர்த்த தலம் என்பதால், இங்கு அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பானது.
Also Read | Panchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 17, புரட்டாசி முதல் நாள்
7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள நாகநாதர் ஆலயம் ஜோதிர் லிங்கத் தளம் ஆகும். தெற்கு நோக்கி அமைந்துள்ள லிங்கம் இது.
8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் திருக்கோயில்
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயம் உஜ்ஜயினிலிருந்து 281 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலைமுகட்டில் உருவான சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து வந்ததாகவும், அவற்றை அவர் நர்மதை நதியில் விடப்பட்டபோது அவை சாளக்கிராமங்களாக மாறியதாக கூறப்படுகிறது.
9. அருள்மிகு மஹாகாளேஷ்வர திருக்கோயில்
உஜ்ஜயினி: கார்த்திகை மாத பவுர்ணமி தரிசனம் உஜ்ஜைனில் சிறப்பானது. 5 அடுக்கு கோயில். மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது..
10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் - சித்த பூமி (தேங்கர்) பீகார்
சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ள வைத்தியநாதர் கோவில் பீகாரின் தேங்கரில் அமைந்துள்ளது
11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் - காசி எனப்படும் வாரணாசி
காசியில் இறந்தால் முக்தி என்பது ஐதீகம். இங்கு இறப்பவர்களுக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார் என்பது நம்பிக்கை. இங்கு வரும் பக்தர்கள், ஜோதிர்லிங்கத்திற்கு தாங்களே அபிஷேகம் செய்யலாம். வாரணாசியில் சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை கங்கையில் கரைப்பது வழக்கம்.
12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்
இமயமலையில் இருக்கும் கைலாயநாதனின் ஜோதிர்லிங்கம் உமைக்கு ஈசன் இடப்பாகம் அருளிய தலம். இங்கு 6 மாதங்கள் மனிதர்கள் பூஜை செய்வார்கள். குளிர்காலத்தில் ஆலயம் மூடியிருக்கும் 6 மாதங்களும் தேவர்கள் பூஜை செய்வதாக ஐதீகம்.
Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR