CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான்

தனிநபர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?... பணத்தை வசூலிக்கக வங்கி உங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 10, 2024, 09:56 AM IST
  • இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர் கடனை வசூலிப்பதற்கு சில கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.
  • கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
  • பல நேரங்களில் வாடிக்கையாளர் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.
CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான் title=

Personal Loan Tips: நிதி நெருக்கடி என்பது, அனைவருக்கும் ஏற்றபடக் கூடிய பொதுவான பிரச்சனை தான். நம்மில் பெரும்பாலானோர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், நிச்சயம் கடன் வாங்கும் நிலையை சந்தித்திருப்போம். அந்த சமயத்தில் நம் மனதில் முதலில் தோன்றுவது வங்கிகளிடம் இருந்து பெறும் தனி நபர் கடன். தனிநபர் கடன் வாங்குவது சுலபமானது தான். ஆனால், தனிநபர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், உங்கள் நிதி நிலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மன உளைச்சல் மற்றும் சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

கடனைத் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்கள் நிதிச் சிக்கல்களை மட்டுமல்ல, சட்டப் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் தனி நபர் கடனைப் பெற்றிருந்தால் (Personal Loan Tips), அதை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். தனிப்பட்ட கடனை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது உங்கள் நிதி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தனிநபர் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் என்ன என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு

நீங்கள் சரியான நேரத்தில் தனிநபர் கடனை செலுத்தவில்லை என்றால், முதல் தாக்கம் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தான் ஏற்படும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைந்து விடும், இதன் காரணமாக எதிர்காலத்தில் புதிதாக கடன் வாங்குவது கடினமாக இருக்கலாம். உங்கள் மீதான நமபகத் தனமை பாதிக்கப்படுவதால், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உங்களுக்கு கடன் கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள்.

சட்ட நடவடிக்கை

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
வங்கிகள் சிவில் நீதிமன்றத்தை அணுகி, உங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அல்லது சம்பளத்தை நிறுத்தி வைக்கக் கோரலாம்.நீங்கள் வேண்டுமென்றே மோசடி செய்ததாக வங்கி கருதினால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | வருமான வரி சேமிப்பு டிபஸ்... இந்த அலவன்சுகளுக்கு வரி கிடையாது.. நோட் பண்ணுங்க மக்களே

கடன் வசூல் ஏஜென்சிகளின் நடவடிக்கை

உங்கள் நிலுவைத் தொகையை வங்கிகளால் திரும்பப் பெற முடியாதபோது, ​​அவை கடன் வசூல் ஏஜென்சிகளின் உதவியைப் பெறுகின்றன. இந்த ஏஜென்சிகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வதன் மூலமும் உங்களை நேரிடையாக சந்திப்பதன் மூலமும் உங்களிடமிருந்து பணத்தை வசூல் முயற்சிக்கின்றன. இதனால், பல நேரங்களில் வாடிக்கையாளர் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிகள் கூறுவது என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர் கடனை வசூலிப்பதற்கு சில கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது:

1. கடன் செலுத்தாதவருக்கு வங்கிகள் முதல் நோட்டீஸ் வழங்க வேண்டும்.

2. பணத்தை வசூல் செய்யும் போது வாடிக்கையாளர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

3. வசூல் செய்யும் ஏஜெண்டுகள் வாடிக்கையாளருக்கு தொந்தரவுகள் கொடுக்காமல் இருக்க வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன

கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் முதலில் வங்கியிடம் பேசுங்கள். நீங்கள் கடனை திரும்ப செலுத்துவதற்கான பிற ஆப்ஷன்கள் குறித்து அல்லது EMI தொகையை குறைப்பது குறித்து வங்கிகளிடம் கேட்கலாம்.
ஒரு மொத்த தொகை செலுத்தி, செட்டில்மெண்ட் தீர்வை வழங்க கோரி வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

மேலும் படிக்க | SCSS: உத்திரவாத வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்கள்... மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News