ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 19, 2022, 01:40 PM IST
  • ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.
  • தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ரூ.51,570/- வரை மாத ஊதியம்.
ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! title=

Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.51,570 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology) பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி உடன் MS/ MD/ DNB / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 1 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visiting Consultant (Ophthalmology) – ஒரு வருகைக்கு ரூ.5000/

Part Time Doctor (Ophthalmology) – ரூ.51,570

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணல் விவரம்:

Visiting Consultant (Radiologist) – 25.10.2022

Doctor (Ophthalmology – 28.10.2022

Visiting Consultant (Ophthalmology) – 31.10.2022

மேலும் படிக்க | தாம்பரம் to திருநெல்வேலி; தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News