உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் Jeff Bezos-க்கு முதலிடம்!

உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசானின் ஜெஃப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார்!

Last Updated : Jul 17, 2018, 04:57 PM IST
உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் Jeff Bezos-க்கு முதலிடம்! title=

உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசானின் ஜெஃப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார்!

அமேஷான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  ஜெஃப் பெஸோஸ் Rs 10,20,000 கோடி சொத்து மதிப்புகளுடன் உலக கோடிஸ்வரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் Rs 6,49,400 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸினை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமேஷான் நிறுவனர் ஜெஃப் முதல்முறையாக முந்தி முதலிடம் பிடித்தார். தற்போது இரண்டாவது முறையாக அவர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேவை மனப்பான்மை கொண்ட பில்கேட்ஸ், தனது பில் மற்றும் மெலிண்டே கேட்ஸ் பவுன்டேஷனுக்கு சுமார் 700 மில்லியன் மைக்ரோசாப்ட் நிறுவன ஷேர்களை வழங்கியுள்ளார். அதுமட்டும் அல்லாமல் ரொக்கமாகவும் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாயினையும் சேரிட்டிக்காக வழங்கியுள்ளார். இதன் காரணமாகவே இப்பட்டியலில் இவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என தெரிகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் Rs 3,01,240 கோடி சொத்து மதிப்புகளுடன் ரிலையன்ஸ் குழமத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். உலக அளவில் இவரது பெயர் 33-வது இடத்தை பிடித்துள்ளார்.

போர்பிஸ் பத்திரிக்கையின் கருத்துப்படி இந்தியாவில் இருக்கும் செல்வந்தர்களில் 119 பேர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி அம்பானி முதலிடத்தில் இருக்கின்றார். 

Trending News