இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்களில் ஒன்று. இந்திய இரயில்வே உள்நாட்டில் மட்டுமின்றி அருகிலுள்ள சில நாடுகளுக்கு செல்வதற்கான சேவைகளையும் வழங்குகிறது. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய, பிற போக்குவரத்தை விட ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். மேலும், நகரங்களில் இயக்கப்படும் உள்ளூர் ரயில் சேவைகள் அந்த நகரங்களின் உயிர்நாடியாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில் ரயில் பயணம் கட்டணம் மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், குறைவானது மற்றும் வசதியானது.
ரயில் பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பல வகையான வசதிகள் பற்றி, பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் பயணிகள் இந்த வசதிகள் அனைத்தையும் மிகக் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ரயில் பயணிகளுக்கு டிக்கெட்டுடன், என்னென்ன வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.
பயணத்தின் போது தங்குவதற்கான வசதி
நீங்கள் பயணத்தின் போது தங்குவதற்கு ஹோட்டல் அல்லது ஹோம் ஸ்டே போன்றவற்றுக்கு அதிக பணம் செலவழித்து ஹோட்டலில் தங்க வேண்டியதில்லை. உங்களின் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுடன் ஐஆர்சிடிசி தங்கும் விடுதியில் தங்குவதற்கு இந்திய ரயில்வே வசதியைக் கொடுக்கிறது. அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தில். 24 மணிநேரத்திற்கு 150 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.
காத்திருப்பு அறை வசதி
ரயில் தாமதம் ஏற்பட்டால், ஐஆர்சிடிசியின் காத்திருப்பு அறையில் நேரத்தை செலவிடலாம். இங்கு ஏசி மற்றும் ஏசி இல்லாத காத்திருப்பு அறைகள் உள்ளன. உங்களின் ரயில் டிக்கெட்டைக் காட்டி இந்த வசதியை இலவசமாக பயன்படுத்தலாம்.
லாக்கர் அறை மற்றும் கிளாக் அறை
பல நேரங்களில், பயணத்தின் போது ரயில்கள் தாமதமானாலோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ, ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்ல அல்லது தங்க நேரிடலாம். அப்போது உங்கள் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்க ரயில்வேயின் லாக்கர் அறை மற்றும் கிளாக் அறையைப் பயன்படுத்தலாம். இந்த வசதி அனைத்து நிலையங்களிலும் உள்ளது. உங்கள் சாமான்களை மிக குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக வைக்கலாம். இந்தவசதியைப் பெற உங்களிடன் கன்பர்ம் ரயில் டிக்கெட் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
இலவச உணவு வசதி
IRCTC ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச உணவை வழங்குகிறது. இது தவிர, இந்த ரயில்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தாமதமானால், ஐஆர்சிடிசி கேன்டீனில் இருந்து பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
மருத்துவ அவசர உதவி
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் போது ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டால், IRCTC உங்களுக்கு உடனடி மருத்துவ உதவியை வழங்குகிறது. இந்த வசதியைப் பெற நீங்கள் 139 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது ரயிலில் இருக்கும் பொறுப்பான ஊழியர்களின் உதவியைப் பெறலாம். உடல்நிலை மோசமடைந்தால், அடுத்த ஸ்டேஷனில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவீர்கள்.
பயணக் காப்பீடு
இந்திய ரயில்வேயும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 45 பைசா கட்டணத்தில் ரூ.7 முதல் 10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்த காப்பீடு உங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்பட்டால் நிதி உதவி வழங்குகிறது. இந்தக் காப்பீட்டின் பலனைப் பெற, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உங்கள் நாமினியைப் பற்றிய சரியான தகவலை வழங்குவது அவசியம்.
ஏசி வகுப்பில் கிடைக்கும் வசதிகள்
ரயில்வே தனது ஏசி பெட்டிகளின் பயணிகளுக்கு தலையணைகள் மற்றும் போர்வைகளை வழங்குகிறது. கரிப் ரத் போன்ற ரயில்களிலும் இந்த வசதி உள்ளது.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் தாமதமானால்... பயணிகளுக்கு கிடைக்கும் சில சலுகைகளும் வசதிகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ