சைவ உணவு, அசைவ உணவு என எந்த உணவு பிரியர்களுக்கும் விருப்ப உணவாக இருப்பது காளான். காளான் பிரியாணி, காளான் ரைஸ், காளான் வறுவல், காளான் குழம்பு என காளான்கள் விதவிதமாக சமைக்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி அசைவத்தை வைத்து பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுவது போல் சைவத்தில் காளான்களை வைத்து பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்க முடியும் என்பதால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
உணவுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் காளான் உதவுகிறது. மூச்சுத் திணறல் பிரச்னை இருப்பவர்கள், கல்லீரல் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு காளான் நல்ல பலன் மிகுந்த உணவாகும். ஆண்டி பாக்டீரியா தன்மை கொண்ட காளான் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. காளான் சாதாரணமாக சமதள பகுதிகளில் வளரக்கூடியது ஆகும். வாரத்தில் இருமுறையாவது காளான் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதே சமயம், காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
வயிற்று பிரச்னை:
காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். எல்லோருடைய உடலும் இதை ஏற்றுக்கொள்ளாது.
சரும அலர்ஜி:
காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் மிக முக்கியமானது சரும அலர்ஜி. சிலருக்கு காளான் சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
மேலும் படிக்க | முகத்தில் எண்ணெய் வடிகிறதா ?... இதை செய்யுங்கள் போதும்
போதை:
அபின், கஞ்சா போன்று போதை தரக்கூடிய காளான் வகைகளும் உண்டு. அது மேஜிக் மஷ்ரும் என்று அழைக்கப்படுகின்றன. அவை தடை செய்யப்பட்டிருக்கின்றன. நாம் சாதாரணமாக உட்கொள்ளும் காளானில் இந்த அளவுக்கான போதை நிலை இருக்காது. ஆனால், காட்டில் விளையக் கூடிய காளான்களை சாப்பிடுவோருக்கு நிதானம் தவறுதல், தன்னிலை மறத்தல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.
மேலும் படிக்க | இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு - 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata