உடல் எடை குறைக்க இந்த பானங்களை குடிக்கவும் : உடல் எடையை குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். தொப்பை கொழுப்பு என்பது பிடிவாதமான கொழுப்பு, இது விரைவாக கரைவாதில்லை. அதிக இதற்கு முக்கிய காரணம் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது அல்லது வெளியில் ஜங்க் ஃபுட் சாப்பிட்டுவது ஆகியவை ஆகும். இந்த கொழுப்பை நாம் சரவயான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றின் மூலம் குறைக்கலாம். ஆனால் நாள் முழுவதும் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால், தொப்பையைக் குறைக்கும் பானங்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றலாம். இந்த பானங்கள் கொழுப்பை விரைவாகக் குறைக்க உதவுகிறது. இந்த பானங்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
தொப்பையை குறைக்க சிறந்த பானங்கள் | Belly Fat Loss Drinks :
வெந்தய தண்ணீர்:
வெந்தய விதை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். உடல் ஆரோக்கியம் முதல், சருமம், கூந்தல் போன்றவற்றைக்கும் இந்த தானியங்கள் நன்மை தருகிறது. அதேபோல் வெந்தயத்தில் (Fenugreek Seeds) கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவு உள்ளது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த இவை பயனுள்ளதாக இருக்கும். உடல் எடை குறைக்க அரை டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் சூடுபடுத்தி இந்த தண்ணீரை குடிக்கவும். அசிங்கமான தொப்பை கொழுப்பு குறையத் தொடங்கும்.
மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்.. இதை மட்டும் சாப்பிட்டே தொப்பை கொழுப்பை குறைக்கலாம்
இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீர்:
இஞ்சி மற்றும் மஞ்சளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கும் இவை நல்ல தீர்வை தரும். இந்த கொழுப்பை எரிக்கும் பானத்தை தயாரிக்க, ஒரு கப் தண்ணீரில் ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
சீரகம் தண்ணீர்:
உடல் எடையை குறைக்க சீரகத் தண்ணீரை காலையிலும் மாலையிலும் குடிக்கலாம். எனவே உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க சீரக தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்ய, ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து இரவு ஊறவைக்கவும். பின்னர் காலையில் இந்த தண்ணீரை சூடாக்கி, வெதுவெதுப்பாகி பின்னர் குடிக்கவும்.
கற்றாழை சாறு:
கற்றாழை சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பத்தால் தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கலாம். இதற்கு ஃபிரெஷான கற்றாழையை அரைத்து குடிக்கவும். சுவைக்காக உப்பு அல்லது லேசான தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சாறு தொப்பையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு : அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஈசி வழி: இரவில் இப்படி, இதை சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ