புதுடெல்லி: குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்று விரும்பினால், வீட்டிற்கு சில பொருட்களை கொண்டு வரக்கூடாது. இதுபோன்ற விஷயங்களைக் கொண்டு வருவதால், வீட்டுக் கஷ்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அது பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம். பல நேரங்களில் வீட்டிற்காக சில புதிய பொருட்களை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று குடும்பத்தில் குழப்பம் தொடங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர மனவேறுபாடு அதிகரித்து, பணப்பிரச்சனைகளும் முளைக்கத் தொடங்கும். காரணமே இல்லாமல் கூட, பிரச்சனை, வழக்கு என விவகாரத்தில் சிக்கிக் கொள்ளத் தொடங்குவார்கள்.
திடீர்னு ஏன் இப்படி நடக்க ஆரம்பிச்சதுன்னு புரியல? என்று புலம்புவார்கள். உண்மையில் இது வாஸ்து குறைபாடு. வீட்டில் வைக்கக்கூடாத பல பொருட்கள் உள்ளன. வீட்டில் இவைகளுக்கு இடம் கொடுத்தால் பிரச்சனைகளை நாமே விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். எனவே, வீட்டுக்குள் கொண்டுவரக்கூடாத பொருட்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
Also Read | ஆஞ்சநேயருக்கு செவ்வாய்க்கிழமை ஏன் உகந்தது
ஆயுதங்களை புகைப்படம் எடுக்க வேண்டாம்
வாள், கத்தி, ஈட்டி, துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆபத்தான ஆயுதங்களின் படங்களை வீட்டில் வைக்க வேண்டாம். இது மனதில் வன்முறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது. இதனால் குடும்பத்தில் அமைதி குலைந்து, குடும்பத்தில் மனக்கசப்பு அதிகரிக்கும். இந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலம், சீற்றம் அதிகமாகிறது. தேவையில்லாமல், அது உச்சக்கட்டத்தை அடைகிறது. அதனால் இதுபோன்ற படங்களை வீட்டிற்குள் கொண்டு வரவே கூடாது.
தாஜ்மஹாலின் புகைப்படம்
பலர் தங்கள் வீட்டின் அழகை அதிகரிக்க தாஜ்மஹாலின் (Tajmahal Phtoto) படத்தை வைக்கிறார்கள். அவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. உண்மையில், தாஜ்மஹால் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் (Vastu Shastra) எதிர்மறையான சின்னமாக கருதப்படுகிறது. உண்மையில் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் சமாதி தானே? இந்த புகைப்படம் இருந்து, கணவன்-மனைவி இடையே அன்பை அதிகரிப்பதற்குப் பதிலாக, இடைவெளியை அதிகரிக்கும். எனவே தாஜ்மஹாலின் படமோ, சிலையோ வீட்டில் வைக்காமல் இருப்பது நல்லது.
மர்மமான இடங்களின் புகைப்படங்களைத் தவிர்க்கவும்
சிலர் படைப்பாற்றல் என்ற பெயரில் பேய்கள் அல்லது மர்ம இடங்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பார்கள். இந்த யோசனைக்கு புதுமை என்று பெயரிட்டாலும், எதிர்மறை ஆற்றல் (Negative Energy) வீட்டிற்குள் வந்துவிடுகிறது. இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு விசித்திரமான பிரச்சனைகள் ஏற்படும்.எனவே, உங்கள் வீட்டிலும் இதுபோன்ற படம் இருந்தால், உடனடியாக அதை அகற்றவும்.
Also Read | வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருக சில டிப்ஸ்..!!
மகாபாரதம் தொடர்பான படம் இருக்கிறதா?
மகாபாரதம் தொடர்பான படத்தை வீட்டில் வைக்க வேண்டாம். உண்மையில் மகாபாரதம் (Mahabharatha Epic) ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த மோசமான சண்டையால் (Family Dispute) நாடே பாதித்ததை சொல்வது. பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும், பகையாளியாக மாறி நடத்தியப் போர். மகாபாரதத்தின் படம் வீட்டில் இருந்தால், குடும்பத்தில் மோதல் உணர்வு அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, மகாபாரதத்தின் படம் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு தடையாக இருக்கும். எனவே, மகாபாரதம் தொடர்பான ஏதாவது புகைப்படம் வீட்டில் இருந்தால், அதை இன்றே தூக்கிப் போட்டுவிடவும்.
வீட்டின் செலவை அதிகரிக்கும் புகைப்படங்கள்
நீரூற்று, விலையுயர்ந்த ஹோட்டல், பள்ளி அல்லது மருத்துவமனையின் படத்தை வீட்டில் வைக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி (Vastu Shastra), இவை அனைத்தும் செலவை அதிகரிப்பவை, நிதி நிலைமையை கெடுப்பவை. இதுபோன்ற படங்கள் குடும்பத்தை அதிக செலவு செய்ய தூண்டுகிறது. எனவே, நீங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிதி நன்மைகளை விரும்பினால், இந்த பொருட்களை உங்கள் வீட்டிற்குள் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ALSO READ | இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR