“காலையில் சீக்கிரம் எழுவதால் உடலுக்கும் மனதிற்கும் நல்லது” என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். “தூங்காதே பாப்பா தூங்காதே..” என பலர் நம் காதருகே வந்து பாடினாலும் நம்மால் அந்த அதிகாலை தூக்கத்தில் இருந்து எழவே முடியாது. அதிலும் ஒரு சிலருக்கு சீக்கிரம் எழுந்து கொள்வது என்றால் பாகற்காய் சாப்பிடுவது போல இருக்கும். ஆனால், அவர்கள் உள்பட நம்மில் பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்து தனக்கான வேலைகளை பார்க்க வேண்டும், அந்த நாளை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு காலையில் சிரமமின்றி சீக்கிரம் எழுந்து கொள்ள சில டிப்ஸ் இதோ.
1.சீக்கிரமாக உறங்க செல்ல வேண்டும்:
உங்கள் உடலை சீக்கிரமாக உறங்க செல்ல பயிற்சி அளிப்பது, நீங்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சிரமமின்றி எழுந்து கொள்ள உதவும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். இதை விட குறைவான நேரம் உறங்குபவர்களுக்கு காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ள சிரமமாகத்தான் இருக்கும். ஆகவே, நீங்கள் இரவு மிகவும் தாமதமாக உறங்க செல்பவர் என்றால், அந்த பழக்கத்தை இப்போதே விட்டுவிட்டு கண்டிப்பாக சீக்கிரமாக உறங்க செல்லுங்கள். இந்த பழக்கத்தை கொண்டு வந்து விட்டால் விரைவிலேயே நீங்கள் எழுந்து கொள்ளும் நேரமும் அதிகாலையாக இருக்கும்.
2.சாதனங்களை தவிருங்கள்:
உறங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர், ஸ்க்ரீன் எதையும் பார்க்காமல் இருக்க வேண்டும். இது, இரவில் உங்களுக்கு தூக்கம் வருவதற்கு உதவும். லேப்டாப், மொபை போன், டிவி, டேப்லட் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து வரும் புளூ லைட் கதிர்களால் உங்களது உடலில் உள்ள மெலடோனின் அளவு குறையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது, தூக்கம் வருவதை தூண்டும் என கூறப்படுகிறது. நீங்கள் ஸ்க்ரீன் பார்ப்பதால் இதில் மாற்றம் ஏற்படுகிவதாகவும் அதனால் உங்கள் தூக்கம் கெட்டுப்போவதாகவும் மருத்துவ அறிக்கைகள் சில தெரிவிக்கின்றன. டெக் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் தொடாமல் உறங்க செல்வதால் உங்களுக்கு நல்ல தூக்கம் வருவது உறுதி.
3.இரவில் நொறுக்குத்தீனியை தவிருங்கள்:
இரவு உணவுக்கு முன்னர் அல்லது அதன் பின்னர் நொறுக்குத்தீனி வகை திண்பண்டங்களை சாப்பிடுவதால் உங்களது தூக்கம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இதனால் வயிற்றில் தேவையற்ற அமிலங்கள் சுரக்க வாய்ப்பிருக்கிறது. சோர்வு, தாகம் போன்ற உணர்வுகளும் நம்மை திண்பண்டங்கள் நோக்கி தள்ளும். அதனால், இரவில் நொறுக்குத்தீனிகளை நொறுக்குவதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | உடல் எடை சட்டென குறைய-காலையில் எழுந்தவுடன் ‘இதை’ செய்யுங்கள்!
4.இரவில் காபி-டீ வேண்டாம்!
காலையில் காபி-டீ குடிப்பதையே தவிர்க்க வேண்டும் என்று பல மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். இரவில் காபி அல்லது டீ போன்ற பானங்களை குடிப்பது கண்டிப்பாக உறக்கத்தை குலைக்கும் என சில மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலர், ஏதாவது ஒரு சில நாட்களில் விழித்துக்கொண்டு வேலை செய்வதற்காக அல்லது படிப்பதற்காக எனர்ஜி தரும் பானங்கள், காபி, டீ போன்றவற்றை பருகுவதுண்டு. இரவில் இது போன்ற பானங்களை குடிக்கும் பழக்கத்தினை கொண்டவராக இருந்தால் அதை உடனே நிறுத்தி விடுங்கள்.
5.ஜன்னலுக்கு எதிரே உறங்கவும்..
காலையில் சூரிய ஒளி படும் திசையில் தூங்குவது, காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ள உதவும். இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் ஜன்னலை ஸ்க்ரீன் வைத்து மூடாதீர்கள். சூரிய ஒளி உங்கள் மீது படும் போது இயற்கையாகவே நீங்கள் துயிலெழுவீர்கள்.
6. அலாரம் கடிகாரத்தை சற்று தள்ளியே வையுங்கள்:
நீங்கள் உங்கள் மொபைல் போனிலோ அல்லது கடிகாரத்திலோ அலாரம் வைத்தாலும், அதை உங்கள் படுக்கைக்கு அருகிலேயே வைப்பதை தவிருங்கள். நீங்கள் உறங்கும் இடத்தில் இருந்து, 5 அடி நடந்து செல்லும் தொலைவிலாவது அலாரம் அடிக்க வேண்டும். ஏனென்றால், நம் அருகிலேயே அலாரம் அடிக்கும் போதும் அதை ஆஃப் செய்து விட்டு உறங்க சென்று விடுவோம். எனவே, நீங்கள் நடந்து செல்லும் தொலைவில் வைத்தால், அதை ஆஃப் செய்ய நீங்கள் எழுந்து நடந்துதான் ஆக வேண்டும். அப்போது கண்டிப்பாக உங்களுக்கு தூக்கம் கலையும். இதை பழக்கமாக மாற்றிக்கொண்டால் தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ