Jeans Pant Washing: எப்போதும் சுத்தமான ஆடைகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நமது உடலில் நோய்கள் ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். அழுக்கு துணிகளை பயன்படுத்தும் போது தோல்களில் பாதிப்புகள் ஏற்படலாம். சுத்தமான துணிகளை பயன்படுத்துவது தனிப்பட்ட சுகாதாரம் மட்டுமில்லாமல், ஒருவரின் நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கிறது. ஒவ்வொரு துணிகளையும் ஒவ்வொரு விதத்தில் பயன்படுத்த வேண்டும். துவைக்கும் போது ஒவ்வொரு துணிகளின் அதிர்வெண் மாறுபடும். ஜீன்ஸ், உள்ளாடைகள், சாக்ஸ், டீ சர்ட், சட்டை போன்றவற்றை எப்படி துவைக்கலாம்? எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளர... நீங்கள் செய்ய வேண்டியவை..!!
ஜீன்ஸ்
நம்மில் பலர் ஜீன்ஸ் பேண்டை 4 முதல் 5 முறை பயன்படுத்துகின்றனர். ஜீன்ஸ் கடினமாக உள்ளதால் இவற்றை அடிக்கடி துவைப்பதும் கடினமான விஷயம். மேலும் ஜீன்ஸ் பேண்டை அதிகமாக துவைத்தாலும் அதில் உள்ள சாயம் மங்கி பழையது போல் ஆக வாய்ப்புள்ளது. ஒரு முறை துவைத்த ஜீன்ஸ் பேண்டை 5 முதல் 6 முறை அணியலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி துவைக்காமல் கரை உள்ள இடங்களை சுத்தம் செய்து, ஒரு முறை பயன்படுத்திய பிறகு வெயிலில் காய வைத்து பிறகு மீண்டும் பயன்படுத்தலாம்.
உள்ளாடைகள்
உள்ளாடைகளை ஒருமுறை பயன்படுத்திய பின்பே துவைக்க வேண்டும். ஏனெனில் நாள் முழுவதும் நமது உடலுடன் ஒட்டி இருக்கிறது. எனவே நமது உடலில் உள்ள வியர்வை நிச்சயம் உள்ளாடைகள் மீது இருக்கும். அதனை மீண்டும் பயன்படுத்தினால் தோல் வியாதிகள் வர வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு முறை அணிந்த பிறகும் துவைக்க வேண்டும். அதே சமயம் உள்ளாடைகளுக்கு மேல போல துணிகளை அவற்றின் தரத்தை பொறுத்து துவைக்க வேண்டும். எப்பொழுதும் துணிகளில் உள்ள லேபிளின் வழிமுறைகளைப் பின்பற்றவும். உள்ளாடைகளை கைகளில் துவைப்பது நல்லது, வாஷிங் மிஷினில் துவைக்கும் போது எளிதில் கிழிந்து போக வாய்ப்புள்ளது.
சாக்ஸ்
தினசரி சாக்ஸ் பயன்படுத்திய பிறகு உடனே துவைக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே அடிக்கடி துவைக்க வேண்டியது அவசியம். சாக்சில் அதிக வியர்வை மற்றும் துர்நாற்றம் இருக்கும். ஒருமுறை பயன்படுத்திய பிறகு துவைக்காமல் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
சட்டை
சட்டைகள் தோலுடன் ஒட்டி இருக்கும். எனவே ஒருமுறை பயன்படுத்திய பிறகு அழுக்காக இல்லை என்றாலும் துவைப்பது தனிப்பட்ட சுகாதாரத்திற்கு முக்கியமானது. அதே போல டி ஷர்ட்களை ஒவ்வொரு முறை அணிந்த பிறகும், அந்த காலகட்டத்திற்கு ஏற்ப துவைக்கலாம். வெயில் காலத்தில் ஒருமுறை பயன்படுத்திய பிறகும், குளிர்காலத்தில் இரண்டு முறையும் பயன்படுத்தலாம். சர்ட் மற்றும் டி சர்ட்டுகளுக்கு சரியான சலவை வழிமுறைகளுக்கான பின்பற்ற வேண்டும்.
மேலும் படிக்க | பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ