காதல், திருமண வாழ்க்கையில் சந்திக்கும் துரோகம் மற்றவர்களால் ஏற்படும் துரோகங்களால் ஏற்படும் வலியை விட அதிகமாக இருக்கும். இது ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஒருவர் அனுபவிக்கக்கூடிய மிகவும் வேதனையான உணர்வு என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி சொல்ல முடியும். தன்னம்பிக்கையை சீரழித்து, பசியின்மை, குடல் பிரச்சினைகள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் வித்திடுகின்றன. Personal Relationship என்ற இதழில் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நடைபெறும் துரோகம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | குட்டையாக இருக்கும் உங்கள் குழந்தையின் உயரம் அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை
அதில், துரோகத்தை எதிர்கொள்ளும் ஒருவர் நீண்டகால உடல் நல பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், அவர்களிடையே மன அதிர்ச்சி, குழப்பம் உள்ளிட்டவை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்மூலம் அவர்கள் நாட்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் பர்சனல் ரிலேஷன்ஷிப்பில் வெளியான ஆய்வு முடிவு கூறுகிறது. 33 முதல் 84 வயது வரையிலான 2,579 பங்கேற்பாளர்களின் தரவை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர். துரோகத்தை எதிர்கொண்ட அவர்களில் பெரும்பாலானோர் ஒற்றைத் தலைவலி, நீரிழிவு நோய் மற்றும் கடுமையான உடல் நோய்களுக்கு உள்ளாகியிருந்ததை கண்டறிந்தனர்.
அதாவது துரோகங்களை எதிர்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய நபர்களுக்கு அதிக உடல்பாதிப்புகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். துரோகத்தை எதிர்கொள்பவர்களுக்கு மன அழுத்தம், தசை பிடிப்பு, பதட்டம், குழப்பம், சந்தேகம் ஆகியவை பெருமளவு இருப்பதாகவும், அதனால் அவர்களின் இயல்பான நடத்தையிலையே மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
துரோகத்தை எவ்வாறு சமாளிப்பது?
துரோகத்தை எதிர்கொள்ளும்போது உடனடியாக ஒருவர் மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. தினசரி வாழ்க்கையில் தியானம், ஆரோக்கியமான உணவுமுறை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும், தங்களுக்கு பிடித்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பழைய நினைவுகளுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்ககூடாது. அடிக்கடி வெளியூர் பயணம் செல்லுங்கள். நம்பிக்கையை அதிகப்படுத்தும் விஷயங்களில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குள் ஏற்படும் வலி, உங்களை தான் காயப்படுத்தும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நீங்களே எதிர்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொண்டு உங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பது இன்றியமையாதது.
மேலும் படிக்க | நினைவற்றல் முதல் உடல் பருமன் வரை... தினமும் 100 கிராம் மக்காச்சோளம் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ