திருமணத்தின் போது மணமேடையில் மப்பில் தள்ளாடிய மாப்பிள்ளை..!

திருமண நாளன்றே மணமேடையில் மப்பில் தள்ளாடிய மாப்பிள்ளையால் பரபரப்பு..! 

Last Updated : Jun 30, 2019, 04:27 PM IST
திருமணத்தின் போது மணமேடையில் மப்பில் தள்ளாடிய மாப்பிள்ளை..! title=

திருமண நாளன்றே மணமேடையில் மப்பில் தள்ளாடிய மாப்பிள்ளையால் பரபரப்பு..! 

"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இந்த உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், தனது திருமணத்தின் போது மூக்கு முட்ட குடித்துவிட்டு மணமேடையில் தள்ளாடிய சம்பவம் ஓன்று நிகழ்ந்துள்ளது. 

பீகார் மாநிலம் சம்ஷித்பூர் பகுதியில் ஒரு சுரஜ்குமார் என்பவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடக்கும் நேரத்தில் மணமகன் மூக்கு முட்ட மது அருந்திவிட்டு தள்ளாடியுள்ளார். இதை கண்ட பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். 

இது குறித்து கேட்கலாம் என அவர்கள் மாப்பிள்ளையின் தந்தையை தேடியபோது அவரும் முழுக்க மது அருந்திவிட்டு தள்ளாடியபடி இருந்துள்ளார். இதை கண்டதும் பெண்ணின் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி, மாப்பிள்ளைக்கு குடிபழக்கம் இருக்கிறது என்றால் திருமண நாளான்றுமா குடிக்க வேண்டும்? அதுவும் தள்ளாடும் அளவிற்கு. சரி, மாப்பிள்ளை தான் இப்படி என்றால் மாப்பிள்ளையின் அப்பாவும் இப்படி தான் இருக்கிறார். என பெண் வீட்டாருக்கு கோபம் வந்தது. 

இதையடுத்து பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். திருமணத்தை நிறுத்தியது மட்டுமல்ல பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரின் அனைவரது முன்னிலையிலும் பெண்ணின் தந்தை ஓம் பிரகாஷ் என்பவர் பேசி தான் திருமணத்திற்காக பல லட்சம் செலவு செய்துள்ளேன் அந்த விழாவில் மாப்பிள்ளையும் அவரது தந்தையும் குடித்து விட்டு தள்ளாடினால் நான் எப்படி அவர்களை நம்பி என் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியும்? திருமணம் செய்து கொடுக்க முடியாது. 

அதே நேரத்தில் இந்த திருமணம் மாப்பிள்ளை வீட்டினரால் தான் நின்றது. அதனால் மாப்பிள்ளை வீட்டு விருந்தினர்களை திருமணத்திற்கான செலவு தொகை மாப்பிள்ளை வீட்டினர் கொடுத்தால் மட்டுமே திரும்ப தர முடியும் என கூறினர். அதன் பின்பு மாப்பிள்ளை வீட்டார் ரூ 3.5 லட்சத்தை கொடுத்த பின்பே அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை மண்டபத்தை விட்டு வெளியே செல்ல அனுமதித்துள்ளனர். 

திருமண நாளன்றே மாப்பிள்ளை குடித்து விட்டு தள்ளாடியபடி நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News