அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வகை வாகனங்களின் உரிமம் ஏப்ரல் 1 முதல் ரத்து!

பழைய வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையின் காரணமாக சுற்றுசூழல் மாசடைந்து விடுகிறது, இந்த மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2023, 07:52 AM IST
  • 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களின் பதிவும் ரத்து.
  • ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.
அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வகை வாகனங்களின் உரிமம் ஏப்ரல் 1 முதல் ரத்து! title=

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆனது மத்திய மோட்டார் வாகன சட்டம் சம்மந்தப்பட்ட முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பின்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் ஸ்கிராப்பைஜ் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.  பழைய வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையின் காரணமாக சுற்றுசூழல் மாசடைந்து விடுகிறது, இந்த மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் தான் போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.  அரசின் இந்த முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது.

veh

மேலும் படிக்க | வெறும் ரூ.19,500 விலையில் அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இத்தனை சிறப்பம்சங்களா?

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவு இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மையம், மாநிலம், யூனியன் பிரதேசம், முனிசிபல் கார்ப்பரேஷன், மாநில போக்குவரத்து மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களிலும் உள்ள 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களும் ரத்து செய்யப்பட உள்ளது.  ஆனால் இந்த பட்டியலில் 15 ஆண்டுகள் பழமையான ராணுவ வாகனங்கள் மட்டும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

vh

இதில் ரிஜிஸ்டர் பதிவு புதுப்பிக்கப்பட்ட வாகனங்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும், இதுபோன்ற பழைய வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட ஸ்கிராப் மையத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வரைவு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News