கண்கவர் கண்ணாடி பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா..!!!

உங்களைச் சுற்றி பல கண்ணாடிப் பொருட்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் கண்ணாடி எதனால் ஆனது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதனை அறிந்து கொண்டால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2021, 01:31 PM IST
கண்கவர் கண்ணாடி பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா..!!! title=

புதுடெல்லி: உங்களைச் சுற்றி பல கண்ணாடிப் பொருட்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் கண்ணாடி எதனால் ஆனது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதனை அறிந்து கொண்டால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கண்ணாடியை உருவாக்கும் செயல்முறை மிகவும் கடினம். இதற்காக நீங்கள் பல கட்டங்களை கடந்து செல்ல வேண்டும். கண்ணாடி எதைக் கொண்டு, எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்?

கண்ணாடி எதனால் ஆனது?

கண்ணாடி மணலால் ஆனது. ஆம் இது உண்மைதான். ஆனால் கண்ணாடி தயாரிக்க சாதாரண மணல் பயன்படுத்தப்படுவதில்லை. கண்ணாடி மணலில் இருந்து தயாரிக்கப்படுகிறது, அதில் சிலிக்கா உள்ளடக்கம் 99 சதவீதம் ஆகும்.

ALSO READ | Watch Viral video: மலைப்பாம்பின் வாயில் சிக்கிய கோழியின் நிலை என்ன..!!

கண்ணாடி தயாரிக்கும் முறை

கண்ணாடி தயாரிக்க முதலில் 75 சதவீதம் மணல், 15 சதவீதம் சோடா சாம்பல் (Soda Ash) , 10 சதவீதம் சுண்ணாம்பு  (Limestone)ஆகியவற்றை ஒன்றாக கலந்து கலவை தயார் செய்யப்படுகிறது. இந்தக் கலவையில், மறுசுழற்சிக்காக (Recycle) முள் துண்டுகளும் சேர்க்கப்படுகின்றன. பின்னர் இந்த கலவை  800 முதல் 1500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில், உலையில் சூடாக்கி உருகுகிறது. கலவை உருகிய பிறகு, அது ஒரு தட்டையான மேடையில் ஊற்றப்படுகிறது, அது முற்றிலும் குளிர்ந்தவுடன், ஒரு தட்டையான பளபளக்கும் கண்ணாடி தயாராகி விடும்.

வெவ்வேறு வடிவத்தில் கண்ணாடி பொருட்களை தயாரிக்கும் விதம்

கண்ணாடியை பல விதமாக வடிவமைக்க வேண்டும் என்றால், உருகிய கலவையை வெவ்வேறு அச்சுகளில் ஊற்றுவதன் மூலம் பல்வேறு விஅடிவங்களில் தயாரிக்கலாம். நம்மைச் சுற்றி கண்ணாடியால் செய்யப்பட்ட பல பொருட்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஜன்னல்கள், கண்ணாடியால் ஆன உணவு பாத்திரங்கள் என அனைத்தும் இப்படித் தான் தயாரிக்கப்படுகின்றன.

ALSO READ |  Viral video of Python: தென்னை மரத்தில் மிக லாவகமாக ஏறும் மலைப்பாம்பு..!!

முதல் நவீன கண்ணாடி 1835  ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானி Justus von Liebig என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று வகையான கண்ணாடிகள் உள்ளன - ஒளிபுகும் தெளிவான கண்ணாடி, ஒளிபுகா கண்ணாடி, சிறிது ஒளிபுகும் கண்ணாடி. ஒளிபுகும் கண்ணாடி வழியாக அனைத்தியும் தெளிவாக பார்க்க முடியும். ஒளிபுகா கண்ணாடி வழியாக எதையும் பார்க்க இயலாது. இது தவிர, சிறிய அளவில் ஒளிபுகும் கண்ணாடி வழியாக மங்கலாக காட்சிகள் தெரியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News