ஆண்களுக்கு, ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது, விந்தணு குறைப்பாடு. பெருமாலானோருக்கு விந்தணு குறைய காரணமாக இருப்பது, ஊட்டச்சத்து குறைபாடு என்று சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விந்தணு உற்பத்தி:
ஆண்களின் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், என்ன முயற்சி செய்தாலும் குழந்தை பெறுவது மிகவும் கடினமாகி விடும். இதனால் இல்லற வாழ்விலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், சில பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள், இந்த விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சிவப்பு இறைச்சி, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்த்திட வேண்டும். விந்தணு உற்பத்தியை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்? இதோ டிப்ஸ்.
1.முட்டை:
முட்டையை பலர், முழுமையான உணவு என்று கூறுவதுண்டு. இதில், புரதச்சத்து நிறைந்துள்ளதால் முட்டைக்கு இந்த பெயர் வந்துள்ளது. முட்டையில் பல வகையான வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளது. முட்டை சாப்பிடுவதால் விந்தணுக்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதற்கு சான்றாக சில மருத்துவ ஆராய்ச்சிகளும் வைக்கப்படுகின்றன. விந்தணுக்கள் அதிகமாக இருப்பவர்களும் முட்டை சாப்பிடுவதால், அவர்களின் விந்தணுக்கள் இயக்கம் மேம்படுகிறது என கூறப்படுகிறது.
2. வாழைப்பழம்:
வாழைப்பழம், உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும் உணவுகளுள் ஒன்று. இந்த பழத்தில் மெக்னீசியம், வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவதால் விந்தணு உற்பத்தி அதிகரிப்பதாக சுகாதார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாழையில் ப்ரோமெலைன் என்ற சத்து உள்ளது. இது, விந்தணுவின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | விந்தணு அதிகரிப்பால் கிடைக்கும் நன்மைகள்
3.கீரை வகைகள்:
கீரை மற்றும் அது சார்ந்த காய்கறிகள் அனைத்தும் உடலுக்கும் எலும்பிற்கும் வலு தரும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில், ஃபோலிக் அமிலம் இருக்கிறது. விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சத்துக்களுள் இதுவும் ஒன்று. மேலும், கீரை உடல் நல பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும். கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
4.பூண்டு:
பூண்டில் ஏலிசின் மற்றும் செலினியும் என்ற இரண்டு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில், ஏலிசின் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இது, இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படும் உடல் பாகத்திற்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கு. இதனால் ஆண்களின் உடலில் உள்ள விந்தணுக்கள் பாதிப்படைவதில் இருந்து தப்பிக்கும். குழந்தை பெற முயற்சிப்போர், தினமும் இரண்டு பல் பூண்டினை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
5.நட்ஸ் வகைகள்:
உடலுக்கு நல்ல கொழுப்பு மற்றும் புரதச்சத்து அளிக்கும் உணவுகளுள் ஒன்று, நட்ஸ் வகைகள். உடலில் விந்தணுக்கள் அதிகரிக்க நல்ல கொழுப்புகளும் உதவி புரிகின்றன. இதில், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டுகள் உள்ளன. இவை, உடலில் உள்ள விந்தணுக்களை அதிகரிக்க செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளுள், நட்ஸ் வகைகளும் ஒன்று. குறிப்பாக வால்நட்ஸ்கள் சாப்பிடுவதால் விந்தணுக்கள் அதிகரிக்கும் என பல கைதேர்ந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | Low Sperm Count: விந்தணு குறைப்பாட்டுக்கான அறிகுறி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ