வைகாசி விசாகம் 2022: புத்தரையும் முருகனையும் வணங்கி வளமாய் வாழும் நாள்

வைகாசி மாத பவுர்ணமி நாள், ஆண்டின் அனைத்து பெளர்ணமி தினக்களிலும் சிறப்பு வாய்ந்தது. இன்று புத்தர் அவதரித்த தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2022, 07:10 AM IST
  • முருகனுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம்
  • புத்தர் அவதரித்த நாள் வைகாசி மாத பவுர்ணமி
  • சந்திரனுக்கு உகந்த நாள் இன்று
வைகாசி விசாகம் 2022: புத்தரையும் முருகனையும் வணங்கி வளமாய் வாழும் நாள் title=

வைகாசி மாத பவுர்ணமி நாள், ஆண்டின் அனைத்து பெளர்ணமி தினக்களிலும் சிறப்பு வாய்ந்தது. இன்று புத்தர் அவதரித்த தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதத்தில், சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ந்துள்ளார். வைகாசி மாத பெளர்ணமியன்று சித்தார்த்தன் என்ற இயற்பெயர் கொண்ட கெளதம புத்தர் பிறந்தார்.

இன்று தமிழ் கடவுள் முருகனுக்கும் சிறப்பு வாய்ந்த தினமாகும். . இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று விரதம் இருப்பதும், தெய்வ வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது. 

மேலும் படிக்க | இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா

வழக்கமாக பெளர்ணமி விரதம் இருப்பதுபோல இன்றும் விரதம் இருந்து மாலையில் முழு நிலவாக தோன்றி, முழுமையாக காட்சியளிக்கும் சந்திர பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது. 

அதோடு இன்று செய்யும் தானங்கள், வழக்கத்தை விட பல மடங்கு பலன் தரும் என்று சொல்லப்படுகிறது. ஜோதிட ரீதியாகவும் சந்திர பலம் குறைந்தவர்கள், இன்று விரதம் இருந்து சந்திரனை வழிபடுவதால், சந்திர தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடும் புத்த பிட்சுக்கள்

மனஅழுத்தம், மனச்சோர்வு என மனரீதியான பிரச்சனைகளையும் இன்றைய விரதம் தீர்க்கும் என்றும், நோய்வாய்ப்பட்டவர்களின் பிராத்தனைக்கு இன்று சந்திர பகவான் செவி சாய்ப்பார் என்றும் நம்பப்படுகிறது.

புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, முக்தி அடைந்தது என அனைத்து முக்கிய நிகழ்வுகளும் வைகாசி மாத பவுர்ணமி நாளன்று நடைபெற்றது. எனவே புத்த மதத்தினருக்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. 2022ஆம் ஆண்டின் புத்த பூர்ணிமா உலகம் முழுவதும் இன்று (2022, மே 16) அனுசரிக்கப்படுகிறது.

இளவரசராக பிறந்தாலும், சிறுவயதிலேயே பக்குவம் அடைந்தவர் சித்தார்த்தன். உலகின் ஏற்றத்தாழ்வுகளையும், துயரங்களையும் பார்த்து மனம் வேதனையடைந்த இளவரசர் சித்தார்த்தன், செல்வம், அதிகாரம் அனைத்தையும் துறந்து மெய்ஞானத்தை தேடி அலைந்தார். தேடலின் முடிவின் மனிதன் புத்தரானார்.

buddha

சித்தார்த்த கௌதமர் (Siddhartha Gautama) நேபாளத்தின் லும்பினி என்ற ஊரில் பிறந்தவர். இந்தியாவின் புத்தகயாவில் தவம் புரிந்து ஞானம் அடைந்தார். புத்தர் உலகில் இருந்து பரிநிர்வாணம் அடைந்த நாள் வைகாசி மாத  பெளர்ணமி தினமான இன்றுதான்... 

வைகாசி மாத பவுர்ணமி தினம், பெளத்தர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் மிகவும் முக்கியமான நாள். வைகாசி மாதத்தில் பெளர்ணமி நாளில் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். எனவேதான் இம்மாத பெளர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம்.

தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனுக்கு உகந்த நாள் இன்று. வைகாசி விசாக நாளான இன்று,  குன்றுதோறும் குடி கொண்டிருக்கும் குமரனை வழிபட்டால் குறைகள் அகலும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மைந்தனை கரம் குவித்து வணங்கினால் கவலைகள் பறந்தோடும்.

மேலும் படிக்க | சிவகுமரன் அறுமுகன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News