Bizarre Custom: திருமணமான 3 நாட்களுக்கு மணமக்கள் கழிப்பறைக்குச் செல்ல முடியாது!

திருமணம் என்ற வார்த்தையை கேட்டதுமே முதலில் வருவது மகிழ்ச்சி தான். ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் தங்கள் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2021, 10:21 PM IST
  • திருமணமான 3 நாட்களுக்கு மணமக்கள் கழிப்பறைக்குச் செல்ல முடியாது!
  • இது இந்தோனேசியாவில் தொடரும் வழக்கம்
  • திருமணம் முடிந்த பிறகு கழிவறைக்கு செல்வது அபசகுனம்
Bizarre Custom: திருமணமான 3 நாட்களுக்கு மணமக்கள் கழிப்பறைக்குச் செல்ல முடியாது!   title=

திருமணம் என்ற வார்த்தையை கேட்டதுமே முதலில் வருவது மகிழ்ச்சி தான். ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் தங்கள் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். 

திருமணத்தில் சடங்கு, சம்பிரதாயங்கள், வழிவழியாய் தொடரும் நம்பிக்கைகள் என வீட்டிற்கு வீடு அனைத்துமே மாறுபடும். பல சடங்குகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சில சங்கடத்தை ஏற்படுத்தும். 

ஒவ்வொரு மதத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் திருமணம் தொடர்பாக வெவ்வேறு பழக்கவழக்கங்கள் உள்ளன, ஆனால் நாம் கேள்விப்படாத சில சம்பிரதாயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. திருமணத்திற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு மணமகனும், மணமகளும் கழிப்பறைக்குச் செல்ல முடியாது. இந்த சம்பிரதாயத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆச்சரியமாக, திகைப்பாக இருக்கிறதா? இது உண்மைதான். 

Also Read | 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்

இது இந்தோனேசியாவில் தொடரும் வழக்கம். அந்நாட்டில் உள்ள டைடோங் என்ற சமூகத்தில் இந்த தனித்துவமான சடங்கு செய்யப்படுகிறது. இந்த சடங்கு பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன.

இந்தோனேசியாவின் திடோங் சமூகத்தைச் (Tidong community) சேர்ந்த மக்கள் இந்த சடங்கை மிக முக்கியமானதாக கருதுகின்றனர், அவர்கள் இந்த சடங்கை தீவிரமாக பின்பற்றுகின்றனர். திருமணம் என்பது ஒரு புனிதமான விழா. எனவே திருமணம் முடிந்த பிறகு கழிவறைக்கு செல்வது அபசகுனம் என்று நம்பப்படுகிறது.

இந்த சடங்கைச் செய்வதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணம், புதிதாக திருமணமான தம்பதியரை தீமையில் இருந்து பாதுகாப்பது என்றும் சொல்லப்படுகிறது. இந்த  மக்களின் நம்பிக்கைகளின்படி, கழிவறையில் அழுக்கு உள்ளது, எனவே அங்கே எதிர்மறை சக்திகள் இருக்கும். திருமணமான மணமகனும், மணமகளும் கழிப்பறைக்குச் சென்றால், அவர்கள் எதிர்மறை சக்தியால் பாதிக்கப்படலாம்.

Also Read | மணக்கோலத்தில் நடனமாடி அனைவரையும் அசத்தும் கேரள மணப்பெண்

அது அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம், உறவில் பிளவு ஏற்படலாம் அல்லது புதிதாக திருமணமான தம்பதியினரின் திருமணம் முறிந்து போகக்கூடும் என்றும் அஞ்சுகின்றனர்.

மணமகனும், மணமகளும் திருமணமான சில நாட்களுக்குள் கழிப்பறையைப் பயன்படுத்தினால், அது அவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நம்புகிறார்கள். மூன்று என்பது எல்லா சமூகங்களிலும் முக்கியமான ஒன்று. தமிழகத்தில் திருமண சடங்குகளின்போது மூன்று முடிச்சு போடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளலாம். 

மூன்று நாட்கள் கழிவறைக்கு செல்லக்கூடாது என்றால் பாவம், மணமக்கள் என்ன செய்வார்கள்! திருமணமான முதல் மூன்று நாட்களுக்கு, மணமகனுக்கும், மணமகளுக்கும் உணவும் தண்ணீரும் மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படும்.

கட்டுப்பாட்டை கடைபிடிப்பதை உறுதி செய்ய, அவர்கள் கழிப்பறைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ள கடுமையான கண்காணிப்பும் உண்டு!! இந்தோனேஷியாவில் இந்த சடங்கு மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறது.

Also Read | தாம்பத்திய வாழ்வை மேம்படுத்தும் சிவப்பு முள்ளங்கி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News