ஜனவரி 1, 2023: ஜிஎஸ்டி முதல் சிலிண்டர் வரை பல மாற்றங்கள், சாமானியர்களுக்கு சாதகமா? பாதகமா

Changes from January 1: புத்தாண்டில் வங்கி லாக்கர், கிரெடிட் கார்டு, மொபைல் தொடர்பான பல விதிகளில் மாற்றம் இருக்கும். இதனுடன் காஸ் சிலிண்டர் விலையும், வாகனங்களின் விலையும் உயரக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2022, 05:19 PM IST
  • புத்தாண்டு முதல் வாகனங்களின் விலை உயரக்கூடும்.
  • வங்கி லாக்கர் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும்.
  • கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம் இருக்கும்.
ஜனவரி 1, 2023: ஜிஎஸ்டி முதல் சிலிண்டர் வரை பல மாற்றங்கள், சாமானியர்களுக்கு சாதகமா? பாதகமா title=

ஜனவரி 1, 2023 முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்: இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்கவுள்ளது. மேலும், புதிய ஆண்டு பல மாற்றங்களுடன் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில், வங்கி லாக்கர், கிரெடிட் கார்டு, மொபைல் தொடர்பான பல விதிகளில் மாற்றம் இருக்கும். இதனுடன் காஸ் சிலிண்டர் விலையும், வாகனங்களின் விலையும் உயரக்கூடும். இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானியர்களை நேரடியாக பாதிக்கும். ஜனவரி 1, 2023 முதல் என்னென்ன முக்கிய மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை இந்த பதிவில் காணலாம். 

வாகனங்கள் விலை அதிகரிக்கக்கூடும்

புத்தாண்டு முதல் வாகனங்களின் விலை உயரக்கூடும். மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனால்ட், கியா இந்தியா மற்றும் எம்ஜி மோட்டார் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி 1, 2023 முதல் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | Free Ration Scheme: நீங்களும் இலவச ரேஷன் பெறனுமா?அப்போ இத மட்டும் பண்ணுங்க

வங்கி லாக்கர் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும்

ஜனவரி 1 ஆம் தேதி முதல், ரிசர்வ் வங்கி மூலம் லாக்கர் வசதி வைத்திருக்கும் அனைவருக்கும் ஒப்பந்தம் தயார் செய்யப்படும். இதில் வாடிக்கையாளர்கள் கையெழுத்திட வேண்டும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, தங்கள் லாக்கர் ஒப்பந்தத்தில் ஏதேனும் நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளதா என்பதை வங்கிகள் முடிவு செய்யும்.

கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம் இருக்கும்

கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்படும். எஹ்டிஎஃப்சி பேங்க், ரிவார்ட் புள்ளிகள் மற்றும் கட்டணங்களை மாற்றப் போகிறது. இது தவிர, சில கார்டுகளின் விதிமுறைகளை மாற்றவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும்

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மறுஆய்வு செய்யப்படுகிறது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்கின்றன அல்லது அதிகரிக்கின்றன.

ஜிஎஸ்டி விதிகள் மாறும்

ஜிஎஸ்டி விதிகளும் ஜனவரி 1 முதல் மாறும். 5 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள வணிகர்கள் மின் விலைப்பட்டியல்களை (இ-இன்வாய்ஸ்) உருவாக்குவது இப்போது அவசியமாகிறது.

மொபைல் விதிகள் மாறும்

இது தவிர, அனைத்து தொலைபேசி உற்பத்தியாளர்களும், அவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் 1 ஆம் தேதி முதல் அனைத்து தொலைபேசிகளின் IMEI எண்ணைப் பதிவு செய்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க | Income Tax: வருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி, இனி இதற்கு வரி விலக்கு கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News