Weight Loss Tips: நமது வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் தினசரி செயல்பாடுகளில் கவனம் இல்லாமல் இருந்தால், அது உடல் எடையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் செயல்பாடுகளற்ற வாழ்க்கை முறை காரணமாக தொப்பை கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. இந்நாட்களில் தொப்பை கொழுப்பு (Belly Fat) பிரச்சனை பலருக்கு இருக்கின்றது. இதற்காக பல வித முயற்சிகளை மக்கள் எடுக்கிறார்கள்.
எனினும் இயற்கையான வழிகளிலும் தொப்பையை குறைக்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைத்து, அதன் மூலம் உடல் எடையை குறைக்கக்கூடிய சில எளிய உணவுகளைப் பற்றி இங்கே கணலாம்.
சியா விதைகள்
சியா விதைகள் (Chia Seeds) சூப்பர்ஃபுட்டாக பார்க்கப்படுகின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. நார்ச்சத்து காரணமாக இதை உட்கொண்டவுடன் அதிக நேரத்திற்கு பசி எடுக்காது. வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கும்.. ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. சியா விதைகளை ஊறவைத்து உட்கொண்டால் நமக்கு நிரம்பிய உணர்வு கிடைப்பதுடன் தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கிறது. இதன் மூலம் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம் (Weight Loss).
முட்டை
முட்டை (Eggs) பலருக்கு பிரியமான ஒரு காலை உணவாக உள்ளது. இதே உட்கொள்ளதால் எடை குறைப்பதில் மிகுந்த உதவி கிடைக்கிறது. முட்டையில் புரதச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் பி12, ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், செலினியம் ஆகியவை உள்ளன. இவை உடல் எடையை குறைப்பதுடன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன. இதன் காரனமாக நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | 30+ ஆண்கள் கவனத்திற்கு... இந்த விஷயங்கள் குறித்து ரொம்ப எச்சரிக்கையாக இருங்க!
அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் பருப்பில் (Walnut) மினரல்கள், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து இரும்புச்சத்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் ஆகியவை உள்ளன. இது தொப்பை கொழிப்பை குறைப்பதுடன் மூளையின் செயல்பாட்டையும் துரிதப்படுத்துகின்றது. கலோரிகளை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஆற்றலை இது அளிக்கின்றது. இரவில் தண்ணீரில் இதை ஊற வைத்து காலை உட்கொண்டால் அதிகப்படியான நன்மைகளை பெறலாம்.
மீன்கள்
அசைவ உணவு உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் உடல் எடையை குறைத்து தொப்பை கொழுப்பையும் குறைக்க மீன்களை (Fish) உட்கொள்ளலாம். . தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு பதிலாக மீன்களை சேர்த்துக் கொள்ளலாம். தொப்பை கொழுப்பை குறைக்கவும் இடுப்பின் சுற்றளவை குறைக்கவும் இது உதவும். மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி2, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.
தயிர்
தயிரில் (Curd) பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில் தயிர் மிகவும் உதவியாக இருக்கின்றது. புரதச்சத்து அதிகம் உள்ள தயிரை காலை உணவில் கொண்டால் திருப்யான உணர்வு கிடைக்கும். தயிரில் கால்சியம், புரதச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி ஆகியவை இருக்கின்றன. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கக்கூடாதா? - தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ