Savings Account Latest News: உங்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு இருக்கா? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி. இவ்வளவு தான் லிமிட்.. அதை மீறினால் வருமான வரி நோட்டீஸ் வரலாம்.
Savings Account Deposit & Withdrawal Limit: உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம் என்பதைக் குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இந்த வரம்பைத் தாண்டிய பரிவர்த்தனை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம் என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
ஒருவர் வங்கியி சேமிப்பு கணக்கு வைத்திருந்தால், எப்ப வேண்டுமானாலும் பணத்தை போடலாம், தேவையான நேரத்தில் எடுத்து செலவு செய்யலாம் என பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி செய்யும் பட்சத்தில், உங்களுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பலாம். எனவே பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கவனமாக இருப்பது மிக முக்கியம்.
ஒரு நாளில் எத்தனை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்? ஒரு வருடத்தில் எத்தனை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்? உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணத்தை பாதுகாப்பாக டெபாசிட் செய்யலாம்? அல்லது எடுக்கலாம்? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள் அனைத்து விவரங்களை பார்ப்போம்.
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பலரும் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது, "ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் மொத்தமாக ரொக்கவைப்பு மற்றும் திரும்ப பெறுதல் ரூபாய் 10 லட்சத்தை தாண்டக்கூடாது" அப்படி ஒருவேளை இந்த லிமிட்டை தாண்டினால் நீங்கள் வருமான வரித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். அதுமட்டுமல்லாமல் இது விசாரணைக்கு கூட வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதில் முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால், தினசரி ரொக்க பரிவர்த்தனை வரம்பு வருமான வரிசட்டத்தின் பிரிவு 269 எஸ்டியின் (269ST) படி, ஒன்று அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல பரிவர்த்தனைகளில் ஒரே நாளில் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல் பணத்தை எடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி சேமிப்பு கணக்குகள் இருந்தாலும், ஒரு நிதியாண்டில் உங்கள் சேமிப்பு கணக்குகளில் மொத்த ரொக்க வைப்புத் தொகை ரூபாய் 10 லட்சத்தை தாண்டும் பட்சத்தில், பிரிவு 114B இன் கீழ், வைப்புத் தொகைகள் எத்தனை கணக்குகளை வினியோகிக்கப்பட்டாலும் வங்கிகள் இந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க சட்டபூர்வமாக கடமைப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமான எந்த ஒரு ரொக்க வைப்புக்கும் உங்கள் பேன் எண் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாகும் மற்றும் ஒருவேளை பான் அட்டை இல்லையென்றால், அதற்கு மாற்றாக படிவம் 60/61 ஐ வழங்க வேண்டும்.
அதிக அளவில் பரிவர்த்தனை மேற்கொண்டு வருமான வரி துறையிடம் இருந்து நோட்டீஸ் பெற்றால், அதற்கான போதுமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். எனவே பண வரவுக்கான ரசீதுகள், சான்றுகள் உட்பட விவரங்களை பராமரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த விதிகளை பின்பற்றினால் வருமானவரி அதிகாரிகளிடமிருந்து தேவையற்ற விசாரணைகளை தவிர்க்கலாம். அதே வேளையில் உங்கள் நிதிகளை மிகவும் நம்பத்தகுந்த வகையில் நிர்வகிக்கலாம். உங்கள் வருமான வரி வருமானம் (ITR) அனைத்து நிதி நடவடிக்கைகளையும் துல்லியமாக பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.