Weekly Horoscope: நண்பராக இருந்தாலும் அலுவலகத்தில் எச்சரிக்கை தேவைப்படும் 3 ராசிக்காரர்கள்

நண்பர்களாக இருந்தாலும் சக பணியாளர் என்று வந்தால் சில சிக்கல்கள் எழலாம். பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசியை சேர்ந்தவர்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 16, 2022, 03:12 PM IST
  • பணியிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது உத்தமம்
  • 3 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
  • வார்த்தையில் நிதானம் அவசியம் மேஷ ராசிக்காரரே
Weekly Horoscope: நண்பராக இருந்தாலும் அலுவலகத்தில் எச்சரிக்கை தேவைப்படும்  3 ராசிக்காரர்கள் title=

வார ராசிபலன்: இந்த வாரம் (ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 23 வரை) சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தேவதை துணையிருப்பார். சில ராசிகளுக்கு மத்திமமான பலன் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல் ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் இட மாற்றமும் சில ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும்.  அடுத்த 7 நாட்களுக்கு சிலர் தொழில் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தி உணர்வுகள் ஏற்படலாம்.

சில நண்பர்கள்களின் ஆதரவு கிடைக்கும், ஆனால், யார் நண்பர்கள் என்று முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படும்.  உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய நண்பர்களிடம் பணிச்சுமையை பற்றி விவாதிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக இந்த வாரம் பணியிடத்திலும், வியாபார இடத்திலும் சற்று கவனமாக நடந்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

கடகம்  இந்த வாரம்  மனதில் நம்பிக்கை அதிகரிக்கும், வேலையில் தொல்லை கொடுப்பவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சலும் ஏற்படும். நம்மிடம் தவறு இல்லை என்னும்போது, ஏன் பயப்படவேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

ஆனால், அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்றாலும், வாய்க்கு லகான் போடுவது என்றுமே நல்லது. சிலருக்கு தன்னம்பிக்கை குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம் - மனஅமைதி இருக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாலும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. அதுவும் குறிப்பாக தொழில் மற்றும் பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.

புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் சக பணியாளர்களின் போட்டியும் பொறாமையும் சலிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தும், பேச்சில் நிதானமாக இருங்கள்.

வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் என்றாலும் அடக்கமாக இருப்பது அவசியம்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News