ஜோதிட சாஸ்திரப்படி சனி மிக மெதுவாக நகரும் கிரகம் ஆகும். சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். சனி தற்போது மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்குள் பெயர்ச்சி ஆக உள்ளார்.
சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
ஏப்ரல் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது
கர்ம பலன் தரும் சனிபகவான் வரும் ஏப்ரல் 29-ம் தேதி ராசி மாறப் போகிறார். அவர்கள் தங்கள் சொந்த ராசியான கும்பத்தில் நுழைவார்கள். இதன் பலன் எல்லா ராசிக்காரர்களுக்கும் இருக்கும், ஆனால் ஒரு ராசிக்காரர்கள் தான் அதிகம் அதாவது ஏழரை வருடங்கள் பாதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 29-ம் தேதி முதல் இந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும்
ஏப்ரல் 29-ம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தவுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும். மறுபுறம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இது தவிர, வேறு சில ராசிகளும் உள்ளன, அவை ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் பலனை பெறுவார்கள்.
பரிகாரங்கள்
- உளுத்தம் பருப்பு, கருப்பு துணி, கருப்பு எள், உளுந்து போன்ற கருப்பு பொருட்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.
- சனிக்கிழமையன்று ஆல மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பதன் மூலம், பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். இது தவிர ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
- சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க சிறந்த வழி அனுமனின் அடைக்கலத்திற்கு செல்வதுதான். சனிக்கிழமையன்று அனுமன் சாலிசா அல்லது சுந்தர்காண்டத்தை பாராயணம் செய்யலாம்.
- சனிக்கிழமையன்று, 'ஓம் ப்ரம் ப்ரீம் ப்ருண் சஹ சனிஷ்சராய நம' மற்றும் ஓம் சனிச்சராயை நமஹ' என்ற மந்திரங்களை உச்சரிக்கவும். இதனால் சனி பகவான் மகிழ்ச்சி அடைவார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR