கடந்த சில வாரங்களாகவே அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் பல ஊடகங்களில் அடுக்கடுக்காக வெளியாகிக்கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கென்று ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது, அதாவது அவர்களின் ஊதியம் அதிகளவு உயரப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கென 8-வது ஊதிய குழுவை அரசு அமல்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது, இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 7வது ஊதியக்குழுவின்படி சம்பளம், படிகள் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி கிடைக்கும் என்றும், ஃபிட்மென்ட் காரணியிலும், அகவிலைப்படியின் இருப்புத் தொகையிலும் அவர்களுக்கு உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் என்ற விகிதத்தில் ஃபிட்மென்ட் வழங்கப்படும் நிலையில் 3.68 ஆக உயர்த்தப்பட வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 3.68 ஆக உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் 2 மடங்கு உயர்த்தப்படும் என தெரிகிறது. இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் 7வது ஊதியக்குழு விரைவில் முடிவடையும் என்றும், 8வது ஊதியக்குழு 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தொடர்ந்து சில செய்திகள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. மேலும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஃபிட்மென்ட் காரணி அங்கீகரிக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.8000 ஆகவும், அடிப்படைச் சம்பளம் ரூ.18000ல் இருந்து ரூ.26000 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ