7th Pay Commission DA news:மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. புத்தாண்டு புதிய பரிசுகளை கொண்டு வர உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்படும்.
ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 2% அல்லது 3% அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அகவிலைப்படியில் 2 சதவீத உயர்வு இருக்குமா அல்லது 3 சதவீத உயர்வு இருக்குமா என்பது டிசம்பரின் ஏஐசிபிஐ தரவுகள் வந்த பிறகுதான் தெரியும். அக்டோபர் வரையிலான ஏஐசிபிஐ தரவு வெளியிடப்பட்டுள்ளது.
குறியீடு தற்போது 124.9 புள்ளிகளை எட்டியுள்ளது. இப்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் அதில் சேர்க்கப்படும். டிசம்பர் புள்ளிவிவரங்கள் ஜனவரி 2022 இறுதிக்குள் வரும். குறியீடு 127-128 க்கு இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால், அகவிலைப்படி 2 சதவீதம் உயரும். மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) 33 சதவீதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி ஜூலை முதல் 31 சதவீதம் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
ஜூலை முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கிடையில், ஜனவரி 2022க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கான பேச்சும் நடைபெற்று வருகிறது.
AICPI குறியீடு அக்டோபர் வரை 124.9-ஐ எட்டியுள்ளது. அக்டோபர் 2021 க்கான தொழிலாளர் அமைச்சகத்தின் AICPI தரவைப் பார்க்கும்போது, குறியீட்டு எண் 1.6 புள்ளிகள் அதிகரித்து, 124.9 ஆக உள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, அகில இந்திய CPI-IW இன் தற்போதைய தரவுகளிலிருந்து அகவிலைப்படி 2% அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கை நவம்பரில் அதிகரித்தால், டிசம்பர் மாதத்திற்குள் 3 சதவீத டிஏ உயர்வு சாத்தியமாகும். ஆனால், நவம்பரில் அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூவில் சரிவு ஏற்பட்டால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் இருக்கும்.
அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்காது
அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 4% அகவிலைப்படிக்கு AICPI IW எண்ணிக்கை 130 புள்ளிகளுக்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு இன்னும் சுமார் 5 புள்ளிகள் தேவை, அடுத்த இரண்டு மாதங்களில் இது சாத்தியமில்லை. எனவே, அதிகபட்சமாக, அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கலாம். 3 சதவீதம் அதிகரித்த பிறகு, மொத்த டிஏ 34 சதவீதமாக மாறும். ஆனால், 2 சதவீதம் அதிகரித்தால், மொத்த டிஏ 33 சதவீதமாக இருக்கும்.
ALSO READ | 7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அட்டகாச புத்தாண்டு பரிசு, அதிகரிக்கிறது ஊதியம்
அகவிலைப்படி 31% அதிகரித்தால், சம்பளக் கணக்கீடு இதுதான்
அடிப்படை ஊதியம் - ரூ 18,000
31 சதவீத அகவிலைப்படி - ரூ 5580
27 சதவீத HRA - ரூ 5400
பயணப்படி (TA) - ரூ 1350
TA மீதான DA - ரூ 419
1 மாத மொத்த சம்பளம் - ரூ 30,749
அகவிலைப்படி 33% அதிகரித்தால், சம்பளக் கணக்கீடு இதுதான்
அடிப்படை ஊதியம் - ரூ 18,000
33 சதவீத அகவிலைப்படி - ரூ 5940
அகவிலைப்படியில் அதிகரிப்பு - மாதம் ரூ. 360
27 சதவீத HRA - ரூ 5400
பயணப்படி (TA) - ரூ 1350
TA மீதான DA - ரூ 446
1 மாத மொத்த சம்பளம் - ரூ 31,136
குறிப்பு: இது மதிப்பீடு அடிப்படையிலான சம்பளமாகும். இதில் பயணப்படி போன்ற கொடுப்பனவுகள் அதிகரித்த பின்னரே இறுதி சம்பளம் பற்றிய தெளிவு கிடைக்கும்.
அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிப்பதன் விளைவு என்ன?
அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரித்தால், லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படியில் மாதம் ரூ.360 அதிகரிக்கும். இது தவிர, அவர்களின் பயணப்படியும் அதிகரிக்கும். அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டால், இந்த அதிகரிப்பு மாதத்திற்கு ரூ.540 ஆக இருக்கும்.
எனினும், AICPI இன் நவம்பர் தரவு வரும்போதுதான் 3 சதவீத அதிகரிப்பு பற்றிய தெளிவான விவரம் கிடைக்கும்.
ALSO READ | மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி! யாருக்கு பலன் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR