Shalini Ajith Kumar : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர், ஷாலினி. இவர், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
Shalini Ajith Kumar : வெகு சில படங்களில் மட்டும் ஹீரோயினாக நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர், நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டீன்-ஏஜ் வயதிலேயே நாயகியாக மாறிய இவர், சில ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தார். இவர், சமீபத்தில் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, இவர் குறித்த சில அறியாத தகவல்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். எந்த சினிமா பின்புலமும் இன்றி திரையுலகிற்கு வந்த இவருக்கு இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். பலருக்கு அஜித்தை பிடித்திருந்தாலும், அஜித்திற்கு பிடித்தது அவரது காதல் மனைவி, ஷாலினியைதான்.
அஜித்தும் ஷாலினியும் முதன்முதலாக, ஷாலினி நடித்த ஒரு படத்தின் விழாவில் சந்தித்துக்கொண்டனர். அப்போது, ஷாலினியின் ஹேர் ஸ்டைல் குறித்து அஜித் ஏதோ கமெண்ட் செய்ய, உடனே ஷாலினிக்கு கோபம் வந்துவிட்டதாம். பின்னர் ஷாலினியிடம் அஜித் சாரி கேட்டாராம்.
1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படம், ஷாலினி-அஜித் குமாரின் காதல் கதைக்கு ஆரம்ப படமாக ஆனது. இந்த படத்தின் படப்பிடிப்பில் காதல் வயப்பட்ட இவர்கள், சில வருடங்களுக்கு தங்கள் ரிலேஷன்ஷிப் குறித்து வெளியில் சொல்லாமல் இருந்தனர்.
அமர்க்களம் படத்திற்கு முன்னர் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்து வந்த ஷாலினி, ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
ஷாலினி தொடர்ச்சியாக அமர்க்களம் படத்திற்கு பிறகு அலைபாயுதே படம் மூலமும் ஹிட் ஹீரோயினாக மாறினார். அதன் பிறகு தொடர்ந்து நடித்திருந்தால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாகியிருக்கும். ஆனால், 2000ஆம் ஆண்டு அஜித்தை கரம் பிடித்த பின்னர், ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.
சினிமாவா? குடும்பமா? என்று வருகையில், குடும்பத்தை பார்க்க வேண்டும் என சினிமா வாழ்வை துறந்த ஷாலினி குறித்த செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது. இதை கேள்விப்பட்டவர்கள், இவருக்கு எவ்ளோ பெரிய நல்ல மனசு என பாராட்டி வருகின்றனர்.
ஷாலினி, சமீபத்தில் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது அஜித்திற்கு 53 வயது ஆகிறது. இருவருக்கும் கிட்டத்தட்ட 9 வயது வித்தியாசமாக இருப்பது, குறிப்பிடத்தக்கது. இந்த பிறந்தநாளுக்காக அஜித் அவருக்கு ஒரு லெக்ஸஸ் காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.