புதுடெல்லி: நீட் கவுன்சிலிங் இரண்டாம் சுற்று இட ஒதுக்கீடு முடிவுகள் mcc.nic.in இல் இன்று அறிவிக்கப்படும். நீட் ஒதுக்கீடு கடிதம் மற்றும் பிற விவரங்களைப் பதிவிறக்குவது எப்படி என்று தெரிந்துக் கொள்ளவும். NEET UG கவுன்சிலிங்: இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட கல்லூரி / நிறுவனத்தை அணுக வேண்டும் என்பதே இதன் முதல் படியாக இருக்கும்.
மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) NEET UG 2023 கவுன்சிலிங் சுற்று 2 இட ஒதுக்கீடு செயல்முறையை ஆகஸ்ட் 18, 2023 அன்று அறிவிக்கும். தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் - இளங்கலை பட்டதாரி (NEET) mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் கவுன்சிலிங் செயல்முறை முடிவைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தேர்வர்கள் அத்தியாவசிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒதுக்கப்பட்ட இருக்கையை உறுதி செய்யும் நடைமுறையின்போது, கல்லூரிகளில் மாணவர்கள், தங்களது அசல் ஆவணங்களை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.
இரண்டாம் சுற்று முடிவுகள் வெளியான பிறகு, குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த இடங்களில் சேராத அல்லது நடைமுறைகளை முடிக்காததால், காலியாக உள்ள இடங்கள் தொடர்பான தகவல்கள், பிறகு மேட்ரிக்ஸில் வெளியிடப்படும் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் புதிய தெரிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது, தேர்வு மற்றும் தகுதியின்படி பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ள மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
NEET UG தகுதி, விண்ணப்பதாரர்களால் நிரப்பப்பட்ட தேர்வுகள் மற்றும் இடங்களின் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பிறகு, NEET UG 2023 சுற்று 2 இட ஒதுக்கீடு முடிவுகள் தயாரிக்கப்படும்.
மேலும் படிக்க | யூஜிசியின் அதிரடி அறிவிப்பினால் கலங்கிப் போன மாணவர்கள்! இனிமேலாமவது உஷாரா இருங்க
NEET UG 2023 கவுன்சிலிங் சுற்று 2 இட ஒதுக்கீடு முடிவுகள் வெளியான பிறகு அடுத்தக்கட்டம் என்ன?
முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு அத்தியாவசிய சான்றிதழ்களை பதிவேற்றம்
2வது சுற்றில் ஒதுக்கப்பட்ட மருத்துவ/பல் மருத்துவக் கல்லூரியில் சேர செல்லும்போது அசல் ஆவணங்களைக் கொண்டு செல்லவேண்டும்.(இரண்டாம் சுற்றில் இடம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், 3வது சுற்றுக்கு மேம்படுத்த விருப்பம் தெரிவிக்கலாம், அதற்காக அவர்கள் ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு நேரடியாக செல்ல வேண்டும்)
இரண்டாம் சுற்றுக்கு மேம்படுத்தப்பட்டால், முதல் சுற்றில் இருந்து மாணவர் விடுவிக்கப்படுவார். அதாவது, அவர் முதல் சுற்றில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்.
2வது சுற்றில் இடங்களை பெற்ற விண்ணப்பதாரர்கள், ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் சேராவிட்டாலோ, அல்லது குறிப்பிட்ட சமயத்தில் ஆவண சரிபார்ப்பை முடிக்காவிட்டாலோ, அவர்களின் பாதுகாப்பு வைப்புத்தொகையை இழக்க நேரிடும்.
இரண்டாம் சுற்றுக்கு தரம் உயர்த்தப்படும் வேட்பாளர்களுக்கு முதல் சுற்றில் எந்தவித உரிமையும் கிடைக்காது.
NEET UG 2023: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
இரண்டாவது சுற்றில் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர தெரிவிக்கவில்லை என்றால், அவர் 3வது சுற்றுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற கேள்விக்கு ஆமாம் என்பதே பதிலாக இருக்கும்.
3வது சுற்று ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் யார்?
3வது சுற்றில் இருக்கை ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் பின்வரும் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள்:
குரூப்–I: நீட் ரவுண்ட் 1 அல்லது ரவுண்ட் 2ல் எந்த இட ஒதுக்கீட்டையும் பெறாத பதிவு செய்த விண்ணப்பதாரர்கள்.
குரூப்-II: இருக்கையைப் பெற்ற பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் 2வது சுற்று சேர்க்கைக்கான அறிக்கையின் ஆவணச் சரிபார்ப்பின் போது ஒதுக்கப்பட்ட இருக்கை ரத்தானவர்கள். அடுத்த சுற்று இருக்கை ஒதுக்கீட்டில், மாற்றப்பட்ட வகையுடன், அந்தந்த பிரிவில் இருக்கை கிடைப்பதைப் பொறுத்து, இட ஒதுக்கீடு பரிசீலிக்கப்படும்.
குரூப்–III: 2வது சுற்று ஒதுக்கீட்டின் போது ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் அறிக்கை செய்து, மூன்றாம் சுற்று தரம் உயர்த்த விருப்பத்தை ஆம் என சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள்.
குரூப்- IV: 2வது சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டு, சேராதவர்கள் அல்லது கட்டணம் செலுத்தி வெளியேறியவர்கள்.
இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிக்கவும் நீட் தேர்வு அவசியம்.
AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கவும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
NTA (National Testing Agency) என்னும் சுயாதீன அமைப்பு இந்தியாவில் நீட்வ்தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.
மேலும் படிக்க | ஜாக்பாட்! ஊழியர்களுக்கு அசத்தல் பரிசு: ஆகஸ்ட் 25க்குள் சம்பளம், போனஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ