உலகம் போற்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான 'பைபிள்' 'பழைய ஏற்பாடு' மற்றும் 'புதிய ஏற்பாடு' என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுள் இறைவனது ராஜ்ஜியத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவன் பத்துக் கட்டளைகளைத் தந்திருப்பதுடன் அவற்றை எப்படி கையாள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
இந்த கதையின் மூலம் இயேசு கிறிஸ்து மனிதர்களுக்கு கூறிய கட்டளைகளைத் பற்றி பார்போம்....!!
ஒருநாள் ராஜா ஒருவர் தூர தேசப்பயணமாக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அதனால் தன் சொத்துக்களை தன்னால் முறையாகப் பராமரிக்க முடியாததால் அவற்றையெல்லாம் விற்று தங்கக் காசுகளாக மாற்றினார்.
பின்னர், தன்னிடமிருந்த ஊழியக்காரர்களை அழைத்து முதல் ஊழியக்காரனிடம், ஐந்து தங்கக் காசுகளையும், இரண்டாவது ஊழியக்காரனிடம் 2 தங்கக் காசுகளையும், மூன்றாவது ஊழியக்காரனிடம் 1 தங்கக் காசுகளைக் கொடுத்து, அவற்றை எல்லாம் நான் வரும் வரை பராமரித்து வையுங்கள். நான் திரும்ப வந்து கேட்கும்போது, அவற்றை என்னிடம் கொடுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஐந்து தங்கக்காசுகளைப் பெற்றவன் அதை வைத்து வியாபாரம் செய்து அதை பத்து பவுன்களாக மாற்றினான். அப்படியே இரண்டு தங்கக் காசுகளைப்பெற்றவனும் வேறு இரண்டு தங்கக் காசுகளை சம்பாதித்தான்.
ஆனால், ஒரு தங்கக்காசைப் பெற்றவனோ, தனது நிலத்தைத் தோண்டி தன் எஜமானுடைய பணத்தை அதில் புதைத்து வைத்தான்.
சில நாட்கள் கடந்த பிறகு, அவர்களுடைய ராஜா ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது ஐந்து தங்கக்காசுகளைப் பெற்றவன் வேறு ஐந்து தங்கக் காசுகளை, 'நான் ஈட்டினேன்' எனக்கூறி அவருடைய தங்கக் காசுகளை திருப்பி கொடுத்தான்.
அதேபோன்று, இரண்டு தங்கக்காசுகளைப் பெற்றவனும் வேறு இரண்டு தங்கக் காசுகளை, 'நான் ஈட்டினேன்' எனக்கூறி அவருடைய தங்கக் காசுகளை திருப்பி கொடுத்தான்.
உடனே ராஜா அவர்களை பார்த்து, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரர்களே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய் அநேகத்தின்மேல் உங்களை அதிகாரியாக வைப்பேன் என்றார்.
ஆனால், ஒரு தங்கக்காசு வாங்கிய ஊழியக்காரனோ, ஆண்டவரே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்பதை அறிவேன்.
அதனால், நான் பயந்துபோய் நீங்கள் கொடுத்த தங்கக் காசை நிலத்தில் புதைத்து வைத்தேன் என்றார். ராஜா அவன் மேல் கோபம் கொண்டு, பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே என்றார்.
பின்னர், அவனிடத்திலிருக்கிற தங்கக்காசை எடுத்து, பத்துத் தங்கக் காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றார்.
உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான் இல்லாதவனிடத்தில் இருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
பயனற்ற ஊழியனான இவனைப் புறம்பான இருளில் தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்'' என்று கூறினார்.
இந்தக் கதையிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியவை.....!
இறைவன் நமக்கு அளித்த வாய்ப்பினைப் நாம் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பயம், சோம்பேறி போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த பூமிப்பந்தின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் நாம் எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.