பெங்களூரு அபார்ட்மெண்டில் கேஸ் வெடித்து தாயும் மகளும் பலி

அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் வெடித்ததில் தாயும் மகளும் பலி, தப்பிக்க பால்கனிக்கு வந்தவர்களை துரத்திய நெருப்பின் பிடியில் பெண்கள் பலியானதை பார்த்த யாராலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 23, 2021, 08:27 PM IST
  • பெங்களூரு கேஸ் சிலிண்டர் விபத்தில் தாயும் மகளும் பலி
  • முதல் நாள் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தனர்
  • 6 மாதங்களாக பூட்டிக் கிடந்த வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது
பெங்களூரு அபார்ட்மெண்டில் கேஸ் வெடித்து தாயும் மகளும் பலி title=

பெங்களூரு: பெங்களூரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 வயது பாக்யா ரேகா உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமையன்று எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்தது. அதற்கு முதல் நாள் தான் குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்து திருப்பியுள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் மகளுடன் ஆறு மாதங்கள் இருந்த ரேகா மற்றும் அவரது கணவர் பீம்சன் ராவ் கடந்த திங்கட்கிழமை தான் வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் பயணக் களைப்பில் இருந்து கூட வெளியே வராத நிலையில் அவர்களுடைய வீட்டில் கொளுந்துவிட்டு எரிந்த தீ பாக்ய ரேகாவை பலி வாங்கியது. இந்த கொடூர தீ விபத்தை வெளியில் இருந்து ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

தேவரச்சிக்கனஹள்ளி, எஸ்.பி.ஐ காலனியில் உள்ள அஷ்ரித் ஆஸ்பயர் அடுக்குமாடி குடியிருப்பில், மாலை 4.15 மணியளவில், தீ விபத்து ஏற்பட்டதாக, பொம்மனஹள்ளி எம்.எல்.ஏ., சதீஷ் ரெட்டி கூறினார்.

பாக்ய ரேகாவின் குடும்பத்திற்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இரண்டு வீடுகள் உள்ளன. ஒரு வீடு அவர்களுடையது, மற்றொன்று மகளுடையது. 210 மற்றும் 211 என அடுத்தடுத்த வீடுகள் உள்ளன. 

Read Also | சிறைச்சாலையில் தீ விபத்து -41 பேர் பலி! 39 பேர் காயம்!

ஆறு மாதங்களாக பூட்டியிருந்த வீட்டை சுத்தம் செய்வதில் பாக்யாவும் அவரது அம்மா லட்சுமிதேவியும் ஈடுபட்டிருந்தனர். தீ விபத்தில் ஏற்பட்டதில்  82 வயது தாயும், மகள் பாக்யாவும் இறந்துவிட்டனர்.

விபத்து நடந்த வீட்டிற்கு அடுத்ததாக இருந்த, மகள் ப்ரீத்தி சந்தோஷின் வீட்டில் ரேகாவின் கணவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் என்று எம்எல்ஏ தெரிவிக்கிறார்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் பாக்ய ரேகா, தனது மகள் ப்ரீதியை தொலைபேசியில் அழைத்து தகவல் சொல்லிவிட்டார். கணவர் ராவ் வெளியே ஓடிவந்து, மனைவியை காப்பாற்ற தன்னுடைய பிளாட்டிற்குள் நுழைய முயன்றார் ஆனால் வீட்டை சூழ்ந்திருந்த அடர்ந்த புகை யால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.

தீ பற்றி முழங்கத் தொடங்கியதும், ரேகாவும் லட்சுமியும் பால்கனிக்கு ஓடினார்கள். ஆனால் பால்கனியில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு கிரில் அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் தடுத்துவிட்டது.

Also Read | தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; 2 பேர் பலி

அவர்கள் இருவரும் பால்கனியில் இருந்து தீயில் எரிவதைப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது.அந்த குடும்பத்திற்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை என்று எம்.எல்.ஏ சொல்கிறார்.

இந்த வீடியோவை பார்க்கும் அனைவரின் கருத்தும் அதுதான். இரு பெண்கள் உயிருக்கும் போராடும் இந்த வீடியோ கல் நெஞ்சையும் கசிந்து கண்ணீர் வரச் செய்வதாக இருக்கிறது.

விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்தவுடனே, ஹுலிமாவு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் குடியிருப்பு வளாகத்துக்கு அனுப்பப்பட்டன. தீயை அணைக்க இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. 

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சேதங்கள் அதிகரிக்காமல் தவிர்க்கப்பட்டது.  ஆனால் பால்கனியில் இருந்து தீயில் இருந்து தப்பிக்கப் போராடிய தாய்-மகளின் வீடியோ பார்ப்பவர்களைப் பதறச் செய்கிறது.

Also Read | நடுநடுங்க வைத்த கோழிக்கோடு விமான விபத்து! இதுதான் காரணமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News