3வது திருமணம் செய்யும் விஜய் மல்லையா! இவர்தான் பெண்!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா (62).

Last Updated : Mar 30, 2018, 01:18 PM IST
3வது திருமணம் செய்யும் விஜய் மல்லையா! இவர்தான் பெண்! title=

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா (62).

இந்தியாவின் விஜய் மல்லையா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

தற்போது விஜய் மல்லையா மூன்றாவது முறையாக பிங்கி லால்வானி என்ற இளம் ஏர்ஹோஸ்ட்ரஸை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக இருந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு விஜய் மல்லையா பிங்கியைச் சந்தித்துள்ளார். அன்றிலிருந்து இருவரும் ஒன்றாகவே இருந்து வருகின்றனர். 

விஜய் மல்லையாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. அவரது முதல் மனைவி சமீரா தியாப்ஜி. 2வது மனைவி ரேகா.  
இவர்கள் மூலம் சித்தார்த் மல்லையா, லியான மல்லையா, தன்யா மல்லையா ஆகிய 3  பிள்ளைகள் உள்ளனர். மனைவிகளை ஏற்கனவே அவர் விவகாரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது பிங்கி லால்வாணியை அவர் மூன்றாவதாக திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் விஜய் மல்லையா பிங்கி லால்வாணியை கைப்பிடிப்பார் என்று அவரது நட்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

Trending News