அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உபி-யில் சிறப்பு முகாம்!

உத்தரபிரதேசத்தில் பாஜக வியாழக்கிழமை (டிசம்பர் 26) முதல் இந்திய குடியுரிமை பெறும் அகதிகளுக்கான பதிவு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது!

Last Updated : Dec 23, 2019, 12:47 PM IST
அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உபி-யில் சிறப்பு முகாம்! title=

உத்தரபிரதேசத்தில் பாஜக வியாழக்கிழமை (டிசம்பர் 26) முதல் இந்திய குடியுரிமை பெறும் அகதிகளுக்கான பதிவு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது!
 
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை அகற்ற ஒரு மாத கால பிரச்சாரத்தையும் கட்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உத்திரபிரதேச பாஜக-வின் இந்த அதிரடி நடவடிக்கை வெளியாகியுள்ளது.

இதனிடையே குடியுரிமைச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பரவலாக பரவி வருவதாகவும், இந்த `கூறுகள் 'இந்த விவகாரத்தில் மாநிலத்தில் அண்மையில் நடந்த வன்முறைகளுக்கு எரியூட்டியதாகவும் உத்திர பிரதேச பாஜக தலைவர் சஸ்வெந்த்ர தேவ் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்., "எங்கள் பிரச்சாரம் டிசம்பர் 26 முதல் ஜனவரி 25 வரை மாநிலம் முழுவதும் CAA-ன் உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது. கட்சித் தொழிலாளர்கள் கிராமப்புற உட்புறங்களில் உள்ளவர்களைச் சென்றடைவார்கள், தவறான எண்ணங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தெளிவுபடுத்துவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

CAA அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கானது என்று குறிப்பிட்ட சிங்., "இந்திய குடியுரிமைக்காக காத்திருக்கும் அகதிகளையும் நாங்கள் இந்த பட்டியலில் பதிவு செய்வோம்," என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களிடையே கட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த சட்டம் பொதுமக்களை பாதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ஏற்கனவே தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை, அவர்களது தொகுதியில் வசிக்கும் அண்டை நாடுகளில் இருந்து வந்த அகதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புதிய குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-ன் கீழ் குடியுரிமை பெற உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 62 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜக, மீதம் உள்ள தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி அலுவலர்களை இந்த செயல்பாட்டிற்கு பயன்படுத்தவுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் பிரச்சாரத்தை நாடு முழுவதும் மாணவர்களின் தலைமையில் நடத்தி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மீது சிறப்பு அழுத்தத்தையும், பல்வேறு அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக எடுத்துள்ள நிலைப்பாட்டையும் கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-ல் பாஜக ஒரு வெள்ளை அறிக்கை தயாரித்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இது பரவலாக விநியோகிக்கப்படும் என்றும், செய்தியை மிகவும் திறம்பட தெரிவிக்க பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து மக்களிடன் அளிக்கப்படும் என்றும் தகல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது ​​தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம் முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும். அதேப்போல் குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்று இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது. 

எனினும் மதரீதியில் இந்த நடவடிக்கை நடத்தப்படுவதாக தெரிவித்து எதிர்கட்சியினர், ஆளும் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News