பிரயாக்ராஜ்: கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரானின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமையன்று பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது.
மாநிலத்தில் தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் ஒமிக்ரான் அச்சங்கள்
நாடு மற்றும் வெளிநாடுகளில் கொரோனாவின் புதிய பிறழ்வான ஒமிக்ரான் (Coronavirus new varrient Omicron) தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கூட்டம் சேருவது குறித்து உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று மற்றும் மூன்றாவது அலையில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பேரணிகளை நடத்துவதைத் தடை செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.
தேர்தலை தள்ளிப் போடுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி, கட்சிகளின் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தேர்தலை தள்ளி வைப்பதையும் பிரதமர் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நீதிபதி, உயிர் இருந்தால் உலகம் இருக்கும் என்று கவலை தெரிவித்தார்.
Also Read | ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா ?
கொரோனா அப்டேட்
தற்போது, உத்தரபிரதேசத்தில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தில் அதிகபட்சமாக லக்னோவில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கவுதம் புத் நகரில் 30 பேருக்கும், காஜியாபாத்தில் 25 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் தற்போது 36 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் உள்ளனர், 39 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.
உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் (Ruling Party BJP) யோகி அரசும் தொற்றுநோயின் புதிய பிறழ்வை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 100 படுக்கைகளும், மாவட்ட மருத்துவமனையில் 50 படுக்கைகளும் ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது தவிர, 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ள மாவட்டங்களில் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்படும். அதன் அடிப்படையில் நொய்டா மற்றும் லக்னோவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதி டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும்.
ALSO READ | கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR