National Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
National Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம். வருமானம் ஈட்டும் தெம்பும் உடலில் இருக்காது. ஆனால், முதுமையில் மாத வருமானம் பெற பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் அரசாங்கமே பல திட்டங்களை நடத்துகின்றன. அவற்றில் ஒரு சிறந்த திட்டம் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS).
என்பிஎஸ் என்பது ஒரு பிரபலமான ஓய்வூதியத் திட்டம். தேசிய ஓய்வூதிய அமைப்பு, வயது மூப்பின் போது மக்களை நிதி ரீதியாக பாதுகாக்க அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு மொத்தத் தொகை கிடைக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமும் கிடைக்கும்.
இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
NPS என்பது சந்தை இணைக்கப்பட்ட திட்டமாகும். அதாவது, இதன் மூலம் வரும் வருமானம் சந்தைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. டயர் 1 கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் டயர்-1 கணக்கு இருந்தால் மட்டுமே டயர்-2 கணக்கை தொடங்க முடியும்.
60 வயதைத் தாண்டிய பிறகு, NPS-ல் முதலீடு செய்த மொத்தத் தொகையில் 60 சதவீதத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்தத் தொகை ஒரு வகையில் என்பிஎஸ் உறுப்பினரின் (NPS Members) ஓய்வூதிய நிதியாக கருதப்படுகின்றது.
குறைந்தபட்சம் 40 சதவீத தொகையை வருடாந்திர தொகையாக (Annuity) பயன்படுத்த வேண்டும். இந்த ஆண்டுத் தொகையிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கும். என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்பது அவர்களது ஆனுவிட்டியைப் பொறுத்தது.
ஒரு நபர் 35 வயதில் என்.பி.எஸ்-ல் முதலீடு செய்யத் தொடங்கினால், இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும், அதாவது 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் அவர் முதலீடு செய்ய வேண்டும். என்பிஎஸ் திட்டத்தில் மாதா மாதம் ரூ.50,000 -க்கு மேல் ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.
NPS கால்குலேட்டரின் படி, ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாய் என 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால், மொத்த முதலீடு 45,00,000 ரூபாயாக இருக்கும். வட்டி விகிதம் 10% என வைத்துக்கொண்டால், மொத்த வட்டித் தொகை ரூ.1,55,68,356 ஆக இருக்கும். இந்த வழியில், உங்களிடம் மொத்த தொகையாக ரூ.2,00,68,356 இருக்கும்.
இந்த மொத்தத் தொகையில் 40% தொகையை வருடாந்திரத் தொகை, அதாவது ஆனுவிட்டியாகப் பயன்படுத்தினால், ஆண்டுத் தொகை ரூ.80,27,342 ஆக இருக்கும். மீதமுள்ள தொகையான ரூ.1,20,41,014 மொத்தத் தொகையாக கிடைக்கும். ஆனுவிட்டி தொகையில் 8% வருமானம் கிடைத்தால், ஒவ்வொரு மாதமும் 53,516 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறலாம்.
முதுமையில் மாத வருமானம் பெற பல திட்டங்கள் உள்ளன. இருப்பினும் அரசாங்க உத்தரவாதம் கொண்ட திட்டங்களில் மிக பாதுகாப்பான திட்டமாக என்பிஎஸ் கருதப்படுகின்றது.