Weight Loss Tips: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தி வரும் வாழ்க்கை முறை நோய்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. மக்கள் உடல் எடையை குறைக்க பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சிகள், ஜிம், உணவு கட்டுப்பாடுகள் என பல வழிகளில் உடல் பருமனுக்கு நிவாரணம் காண ஏகப்பட்ட முயற்சிகளை செய்கிறார்கள். எனினும், அனைவருக்கும் தேவையான விளைவுகள் கிடைப்பதில்லை.
எடை இழப்புக்கு மிக முக்கியமான விஷயமாக கருதப்படுவது குறைந்த கலரி உணவுகளை உட்கொள்வதாகும். உடல் எடையை குறைக்க தினசரி வழக்கமான கலோரி அளவைவிட 200-300 கலோரிகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. இது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியம்.
தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகமாகிவிட்டால் அதைக் குறைப்பது பெரிய சவாலாக உருவெடுத்து விடுகிறது. தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் கடினமான முயற்சிகளை தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் பருமனை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாம் தினந்தோறும் சமைக்கும் உணவில் சேர்க்கப்படும் சில வகையான பொருட்கள் உடலில் உள்ள கலோரிகளை குறைக்கும் வேகத்தை அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த உணவுப் பொருட்கள் நம் சமையல் அறையில் ஒரு இன்றியமையாத அங்கமாகவும் இருக்கின்றன. ஆயுர்வேதத்தில் இவை உடல் எடையை குறைக்கும் மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. எடை இழப்புக்கு மிகவும் உதவும் அத்தகைய மசாலாக்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் இந்த மசாலாக்கள் ஆயுர்வேதத்தில் கொழுப்பை எரிக்கும் உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை எரிப்பதோடு மட்டுமல்லாமல் இவை ஹார்மோன் சமநிலை, இன்சுலின் சென்சிடிவிட்டி, கொழுப்பை கரைத்தல் ஆகியவற்றிலும் உதவுகின்றன.
உடல் எடையை குறைக்க உதவும் சமையலறை மசாலாக்களை பற்றி இங்கே காணலாம்:
இஞ்சி (Ginger)
இஞ்சியில் அதிக அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உஷ்ண இயல்பை கொண்டது. இது செரிமானத்தை சீராக்குவதோடு வளர்ச்சியை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. கலோரிகளை வேகமாக எரிப்பதுடன் இதய ஆரோக்கியத்திற்கும் இஞ்சி நல்லதாக கருதப்படுகிறது. தினமும் காலையில் இஞ்சி சாறு குடிப்பது கொழுப்பை எரிக்க உதவும்.
நெல்லிக்காய் (Amla)
இது உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய தோஷங்களை சமன் செய்கிறது. இதனால் உடலில் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. கலோரிகளை குறைப்பதுடன் நீரிழிவு, முடி உதிர்தல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றுக்கும் இது நிவாரணம் அளிக்கின்றது.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் வரும் நிமோனியா.. அறிகுறிகளும் முன்னெச்சரிக்கையும்...!
பார்லி (Barley)
பல நோய்களை குணப்படுத்த பார்லி உதவுகிறது. இது உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்க அருமருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோய்க்கும் பார்லி நிவாரணம் அளிக்கிறது. செரிமானத்தை சீர் செய்து நினைவாற்றலை அதிகரிக்கும் பண்பும் பார்லியில் உள்ளது. தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் பார்லியை உட்கொள்ளலாம்.
மஞ்சள் (Turmeric)
மஞ்சள் உஷ்ணத்தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் கொலஸ்ட்ரால் நோயாளிகள் ஆகியோருக்கும் இது நல்லது. மஞ்சளில் தண்ணீர் பாலில் சேர்த்து குடிப்பதோடு உணவிலும் தாராளமாக பயன்படுத்தலாம்.
தேன் (Honey)
ஆயுர்வேதத்தில் கலோரிகளை வேகமாக இருக்கும் ஒரு பொருளாக தேன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இது எளிதில் ஜீரணமாகி சளியையும் குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரு மாசம் உப்பு குறைவாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ