ரேஷன் கார்டில் இந்த பிரச்சனை இருந்தால் மகளிர் உரிமை தொகை வராது!

Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை ஏன் வராதவர்களுக்கு ரேஷன் கார்டில் இருக்கும் இந்த பிரச்சனை தெரியாமல் கூட இருக்க வாய்ப்புள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 15, 2024, 11:11 AM IST
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
  • ரேஷன் கார்டு முகவரி பிரச்சனை இருக்கிறதா?
  • உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பில்லை
ரேஷன் கார்டில் இந்த பிரச்சனை இருந்தால் மகளிர் உரிமை தொகை வராது! title=

Kalaignar Magalir Urimai Thogai News Tamil | தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) மூலம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது. பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த தொகையை அரசே செலுத்துகிறது. பொங்கல் பண்டிகை, தீபாவளி என்றால் முன்கூட்டியே கூட மகளிர் உரிமைத் தொகை பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை சுமார் 1 கோடியே 16 லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தில் இருக்கும் நிலையில், விரைவில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட இருக்கின்றனர். அதாவது பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பயனாளிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இதனை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்

ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால், சிலர் இதனை தவறாக புரிந்து கொண்டனர். ரேஷன் கார்டு வைத்திருந்தாலே மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என நினைத்துக் கொண்டனர். ஆனால் அமைச்சர் ராமச்சந்திரன் அப்படி சொல்லவில்லை என்பதை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் கொடுக்கப்படாது. அரசு இந்த திட்ட பயனாளிகளுக்கு என சில அடிப்படை விதிமுறைகளை விதித்திருக்கிறது. அதனடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு இருந்தாலே மாதம் 1000 ரூபாய்... மகளிர் உரிமைத் தொகையில் லேட்டஸ்ட் அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

உதாரணத்ததுக்கு, 2.50 லட்சம் ஆண்டு வருமானம் உடைய குடும்பங்கள், ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் மேல் ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்கள், ஏற்கனவே அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுபவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. அதேநேரத்தில், ரேஷன் கார்டில் வசிக்கும் முகவரியில் இல்லாதவர்கள், முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் தவறாக இருப்பவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் கிடைக்காது. சிலர் ரேஷன் கார்டு இருந்தும் பணம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளை நேரடியாக கள ஆய்வு செய்தே தேர்வு செய்திருக்கின்றனர்.

ஆயிரம் ரூபாய் கிடைக்க வழி

அவர்கள் ஆய்வு செய்யும்போது அல்லது விசாரிக்கும்போது குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. சிலர் விடுப்பட்டும் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்த திட்டம் இப்போது வரிவாக்கம் செய்யப்படும்போது சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால், முகவரி மாற்றம், ஆவணங்கள் முறையாக இல்லாதவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இத்தகைய பிரச்சனைகள் இருப்பவர்கள் அருகில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு சென்று உரிய விளக்கத்தைப் பெற்று ஆவணங்களை சரிசெய்து கொண்டால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகை இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது - லிஸ்ட் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News