‘வீட்டுக் காவலில்’ உமர் அப்துல்லாவும் மெஹபூபா முப்தியும் காஷ்மீரிகளை ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்!
ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆளுநர் சத்யபால் மாலிக் நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் கூட்டங்கள் பேரணிகள் நடத்தக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் சுஷ்மா சவுகான் அறிவித்துள்ளார். ஜம்முவில் 40 கம்பெனி துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை அமலில் இருக்கும்.
இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மற்றும் மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அமைதி காக்கும்படியும் உமர் அப்துல்லா ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். ஒற்றுமையுடன் இருந்து உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என்று மெஹ்பூபா முப்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் நள்ளிரவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இதனிடையே ஸ்ரீநகர் விடுதிகளில் தங்கி படித்துக் கொண்டிருந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று ஹாப்பா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புதுடெல்லி ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். பாதுகாப்பு கருதி அவர்கள் ஸ்ரீநகரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதே ரயிலில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் டெல்லி திரும்பினர்.
Jammu & Kashmir Government: There will be a complete bar on holding any kind of public meetings or rallies during the period of operation of this order. It should be noted that there will be no curfew in place as reported in a section of the media. https://t.co/EGENEM6qUz
— ANI (@ANI) August 4, 2019