2050-குள் கடல்மட்டம் உயர்வினால் இந்தியாவுக்கு ஆபத்து என்று ஐ.நா.வால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 20, 2016, 04:30 PM IST
2050-குள் கடல்மட்டம் உயர்வினால் இந்தியாவுக்கு ஆபத்து என்று ஐ.நா.வால் எச்சரிக்கப்பட்டுள்ளது. title=

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்று சூழல் சட்டமன்றம் நைரோபியில் நடைபெற உள்ளநிலையில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டு உள்ளது, பசிபிக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக மோசமான பாதிப்பு 2050-ம் ஆண்டுக்குள் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விரைவான நகர்மயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வருங்காலங்களில் கொல்கத்தா மற்றும் மும்பையில் கடலோர வெள்ளம் அதிகரிக்கும் என்று உலக சுற்றுச்சூழல் கண்ணோட்டம் தனது பிராந்திய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்மட்டம் உயர்வதினால் உலகளவில் அதிகமாக பாதிக்கப்பட கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. கடல்மட்ட உயர்வினால் இந்தியாவில் சுமார் 40 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்த நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் 25 மில்லியன் மக்களும், சீனாவில் 20 மில்லியன் மக்களும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 15 மில்லியன் மக்களும் ஆபதிக்கபடுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான கடற்கரை பகுதி நகரங்களாக வளர்ந்து வருகிறது. இதனால் இயற்கையான கடற்கரை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. எனவே தீவிர காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்வதில் இயற்கையான கடற்கரை அமைப்பு தோல்வி அடைகிறது.

இந்தியாவில் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்று உள்ளன. இந்நகரங்களில் பெரிய அளவில் உருவாகும் மக்கள் தொகையின் காரணமா கடலோர வெள்ளத்திற்கு வழிவகை செய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Trending News