J&K Kulgam: என்கவுண்டரில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட என்கவுண்டரில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டு, தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2020, 09:35 PM IST
  • இன்று ஜம்மு கஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
  • நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்த தகவல்களின் அடிப்படையில் என்கவுண்டர் மேற்கொள்ளப்பட்டது
  • ஏராளமான ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன
  • தேடுதல் நடவடிக்கைத் தொடர்கிறது
J&K Kulgam: என்கவுண்டரில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர் title=

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்தது. குல்கம் மாவட்டத்தின் அர்ரா பகுதியில் (Arrah area) இந்த என்கவுண்டர் நடைபெற்றது.

முதலில் மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு பயங்கரவாதியை சரணடையுமாறு அவரது  குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதையும் அவர் நிராகரித்தார். எனவே வேறு வழியில்லாமல் இரண்டாவது பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இது குறித்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்ட IGP, (காஷ்மீர் ரேஞ்ச்), “இரண்டாவது பயங்கரவாதியின் குடும்பத்தை என்கவுன்டர் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்ததால், சில மணி நேரத்திற்கு நடவடிக்கை நிறுத்தப்பட்டது. குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர் சரணடைவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், குடும்பத்தினரின் வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே நாங்கள் வேறு வழியில்லாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று விளக்கமளித்தார்.

Read Also | புதுச்சேரி: covid centre அமைக்க தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைக்கவில்லை குற்றச்சாட்டு

முன்னதாக இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ​​ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில், மூன்று பாதுகாப்பு படையினருக்கு காயங்கள் ஏற்பட்டன.

பயங்கரவாதிகள் இருப்பது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்ததை அடுத்து, தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் அர்ரா பகுதியில் சனிக்கிழமையன்று சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுத்தபோது இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Also Read | பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பற்றிய அரிய தகவல்கள்

இந்த அதிரடி நடவடிக்கையின் போது, ​​மூன்று பாதுகாப்பு படையினருக்குக் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்படுகிறது. தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார். அதோடு, ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டனர்.

UBGLs (under-barrel grenade launcher), UBGL கையெறி குண்டுகள், ஏ.கே. இதழ், கைத்துப்பாக்கிகள், AK magazineகள், பிஸ்டல்கள் (pistols) மற்றும் IEDயுடன் கூடிய டெட்டனேட்டர்கள் என பெரும்பாலான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இன்று ராஜோரியிலிருந்து மீட்கப்பட்டன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 122 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News