குமாரசாமி முதலமைச்சராகி 100-வது நாள்: குமாரசாமி - ராகுல் சந்திப்பு...!

கர்நாடகாவில் அண்மையில்  நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் -  ஜேடிஎஸ் (JDS) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமி முதலமைச்சராக கடந்த மே மாதம் 23 ஆம் தேதி பதவியேற்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2018, 12:19 PM IST
குமாரசாமி முதலமைச்சராகி 100-வது நாள்: குமாரசாமி - ராகுல் சந்திப்பு...!  title=

கர்நாடகாவில் அண்மையில்  நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் -  ஜேடிஎஸ் (JDS) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, ஜேடிஎஸ் வேட்பாளர் குமாரசாமி முதலமைச்சராக கடந்த மே மாதம் 23 ஆம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில், கர்நாடகா முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்களை கடந்துள்ளார் கர்நாடக முதலவர் குமாரசாமி. இதை தொடர்ந்து, அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்தார்.  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தபின் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி," இன்றுடன் நான் முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களாகிறது. அதனால் தான் நான் இங்கு வந்து ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தேன். ராகுல் காந்திக்கு கர்நாடகாவில் நடக்கும் ஆட்சி முறை மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், எங்களுடைய அரசாங்ம் நன்கு செயலாற்றவும், சுமுகமாகவும் இருக்கிறது" என்று செய்தியாளர்களிடம் குமாரசாமி தெரிவித்தார்.  

சமீபத்தில், பெங்களூருவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட குமாரசாமி கர்நாடகாவில் உள்ள கூட்டணி அரசாங்கம் ஒவ்வொரு நாளிலும் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என தனது உணர்சியை கண்ணீர் மல்க வெளிப்படுத்தி கூறியது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News