ஞாயிற்றுக்கிழமை நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், ஒரு டீனேஜ் மாணவர் தனது நண்பரை தனது அபார்ட்மெண்டிற்குள் ஒரு சூட்கேஸில் அடைத்து பதுங்க முயன்றபோது பிடிபட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பயத்தை கருத்தில் கொண்டு வளாகத்திற்கு வெளியே இருந்து வரும் எந்தவொரு நபருக்கும் அனுமதியை அபார்ட்மென்ட் அசோசியேஷன் மறுத்த நிலையில், விரக்தியடைந்த மாணவர் வினோதமான முயற்சியை மேற்கொண்டார் என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், வளாகத்தில் வசிப்பவர்கள் பிரமாண்டமான சூட்கேஸுக்குள் ஏதேனும் இருக்கலாம் என சந்தேகம் அடைந்ததால், மாணவரின் சூட்கேஸினை அசோசியேஷன் ஊழ்ழியர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன் போது சூட்கேஸில் இருந்து அவரது நண்பர் வெளிவருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
உடனே, குடியிருப்பாளர்கள் காவல்துறையினரை அழைத்து, அவர்கள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இரு மாணவர்களின் பெற்றோரும் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு இருவரும் வீடு திரும்பினர்.
காவல்துறை கூற்றுப்படி இந்த விவகாரம் தொடர்பாக வழக்க ஏதும் பதிவு செய்யப்படவில்லை,. மாவணர்களை எச்சரித்து பின்னர் அனுப்பிவைத்துள்ளனர்.