Supreme Court On Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பத்திரிகைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறீர்களே, அது ஏன்? எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கூடுதல் ஆதாரம் கேட்ட உச்ச நீதிமன்றம்
இந்த ஆய்வு முடிவு நாடு முழுவதும் உள்ள திருப்பதி பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை பொதுவெளியில் வெளியிட்ட தற்போதைய சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு, இந்த கலப்படத்திற்கு முந்தைய ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிதான் காரணம் என குற்றஞ்சாட்டியது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க | பஸ் vs ரயில் : திருப்பதிக்கு எதில் சென்றால் கட்டணம் குறைவு
அந்த வகையில், இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆந்திர அரசை நோக்கி உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கியது. அதிலும் குறிப்பாக கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்புகளால் கலப்படம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதா எனவும் ஆதாரம் கேட்டனர்.
'அது பாமாயிலாக கூட இருந்திருக்கலாம்'
மேலும் அரசால் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவை பார்க்கும்போது லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் உறுதியான தகவல்கள் ஏதுமின்றி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏன் ஊடகங்களிடம் சென்றார் என உச்ச நீதிமன்றண் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் செப். 25ஆம் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது, செப். 26ஆம் தேதிதான் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது, அப்போது ஏன் செப். 18ஆம் தேதியே சந்திரபாபு நாயுடு இதனை பொதுவெளியில் கூறினார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.
உயர் பதவியில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டப் பணியாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நீதிபதி கவாய் அறிவுறுத்தினார். "நெய்யில் பயன்படுத்தப்பட்ட பொருள் சோயாபீன் அல்லது பாமாயிலாக கூட இருக்கலாம். அது மீன் எண்ணெயாக இல்லாமல் கூட இருக்கலாம்" என்றார். குறைந்தபட்சம், கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.
அக். 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்த விவகாரம் குறித்து ஆந்திரா அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவே விசாரிக்கலாமா அல்லது சுதந்திரமான அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டுமா என உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். மேலும், இது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளில் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அது ஏற்கத்தக்கது அல்ல என்றும் வாதிட்டார். இந்நிலையில், இந்த வழக்கை வரும் அக். 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் சாந்தி ஹோமம் செய்துவிட்டதால் தூய்மையாகிவிட்டது: தலைமை அர்ச்சகர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ