நீங்கள் மீண்டும் களத்தில் இறங்கி தேசத்திற்கு அதிக வெற்றிகளுக்கு பெற்றுத்தர முடியும் என தைவானுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!!
2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவுடனான உலகக் கோப்பை லீக் போட்டியின் போது, இந்திய துவக்க வீரர் தவானுக்கு இடது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த போட்டியில் அவர் ‘பீல்டிங்’ செய்யவில்லை. இதன் பின் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் தவான் மூன்று வாரங்கள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பட்டது.
இதை தொடர்ந்து, எதிர்பார்தத படி தவான் குணமடையாத காரணத்தால், எஞ்சியுள்ள தொடரில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. மாற்று வீரராக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து, தவான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்த உலகக்கோப்பை தொடரில் இனி என்னால் தொடர முடியாது என்பதை உருக்கமாக தெரிவிக்கிறேன். எதிர்பாராதவிதமாக காயம் குறிப்பிட்ட நேரத்தில் குணமடையவில்லை. ஆனால் இந்திய அணி தொடர்ந்து செல்ல வேண்டும். எனக்காக பிரார்தனை செய்து கொண்ட இந்திய ரசிகர்கள் மற்றும் சக வீரர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தவானின் டுவிட்டர் பதிவிற்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; அன்புள்ள @ஷிகர் தவான், ஆடுகளம் உங்களை இழந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன், இதனால் நீங்கள் மீண்டும் களத்தில் இறங்கி தேசத்திற்கு அதிக வெற்றிகளுக்கு பங்களிக்க முடியும்" என பதிவிட்டுள்ளார்.
Dear @SDhawan25, no doubt the pitch will miss you but I hope you recover at the earliest so that you can once again be back on the field and contribute to more wins for the nation. https://t.co/SNFccgeXAo
— Narendra Modi (@narendramodi) June 20, 2019