“நதிகளை மீட்போம்” அமைப்பினர் நாடு முழுவதும் நதிகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் புதுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
“நதிகளை மீட்போம்” அமைப்பினர் கூறுவதாவது:-
இந்தியாவில் நதிகள் அழிந்து கொண்டு வருகிறது. இது ஒரு ஆபத்தான மற்றும் அதிர்ச்சிகரமான உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் வற்றாத நதிகள் அனைத்தும், ஒன்று பருவகால நதிகளாக மாறி வருகின்றன அல்லது அழிந்தே விட்டன. கேரளத்தின் பாரத்புழா, கர்நாடகத்தின் கபினி, தமிழகத்தின் காவிரி பாலாறு மற்றும் வைகை, ஒடிசாவின் முசல், மத்தியப்பிரதேசத்தின் க்ஷிப்ரா இவற்றில் சில. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன. எனவே நதிகளை காப்பது நமது கடமை. நம் நதிகளுக்கு உயிரூட்ட இதுவே சரியான தருணம். உங்கள் ஆதரவை “நதிகளை மீட்போம்” இயக்கத்திற்கு வழங்குங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நதிகள் மீது தங்களுக்கு அக்கறை இருந்தால், அவற்றை மீட்டெடுப்பதற்கு மிக எளிமையான ஒரு வழி, மிஸ்டு கால் கொடுப்பதுதான். நீங்கள் அறிந்தவர்கள், உங்கள் சுற்றத்தார் என அனைவரையும் மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள்.
ஜனநாயக முறையில் செயல்படும் ஒரு நாட்டில், பெருவாரியான மக்களின் குரல் ஒரு விஷயத்திற்காக ஓங்கி ஒலிக்கும்போது, அரசு அதுகுறித்து சிந்தனை செய்யும். மக்களிடமிருந்து போதுமான ஆதரவும், உந்துதலும் இல்லாவிட்டால், ஒரு சாதகமான, “நதி மீட்பு கொள்கையை” இயற்றுவது சுலபமல்ல.
நம் தேசத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது. பொது மக்களின் ஆதரவினை அளக்க, மிகச் சுலபமான ஒரு வழி - மிஸ்டு கால்.
rallyforriver.org என்ற இணையதளத்தில் சென்று முழுவதும் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் “நதிகளை மீட்போம்” அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்க வகையில்> 80009 80009 <என்ற எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.