இந்திய ராணுவ படை தாக்குதல் குறித்த ஆதாரம் கேட்கும் எதிர்கட்சிகள், பாகிஸ்தானின் விளம்பரதாரர்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்!
கடந்த மாதம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 40 CRPF வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து பாகிஸ்தானின் பாலக்கோட்-ல் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டதுடன், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே அறிவித்திருக்கிறார்
எனினும் இந்த தாக்குதல் குறித்து முழுமையான அறிக்கை வெளியிடவேண்டும், இத்தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை என்ன என்பதை மத்திய அரசு தெரிவக்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Sharing some pictures from the massive rally in Dhar, Madhya Pradesh. @BJP4MP pic.twitter.com/pY5QXYCrty
— Narendra Modi (@narendramodi) March 5, 2019
இந்நிலையில் இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி அவர்கள்., இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தான் காங்கிரஸ் கட்சியினர் பாலக்கோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தியா மீது நம்பிக்கை வைக்காத அக்கட்சியினர் பாகிஸ்தான் நாட்டு விளம்பரதாரர்கள் என கடுமையாக சாடினார்.
முன்னதாக அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, "பயங்ரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும், அவர்கள் விட்டு வைக்கப்பட மாட்டார்கள்" என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர்... எதிரியின் எல்லைக்குள் புகுந்து தாக்குவதே நமது வழக்கம்.. இதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவும் பிடிக்காது என்று தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெறுவதற்காக விமானப்படை தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டி வரும் எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிகழ்ந்த போது எதுவும் தேர்தல் நடைபெற்றதா? தீவிரவாதத்தால் நாம் கடந்த 40 வருடங்களாக பாதிக்கப்பட்டு வருகிறோம். நான் அதிகாரம் குறித்து கவலை கொண்டது இல்லை, என்னுடையே ஒரே கவலை நாட்டின் பாதுகாப்பு மட்டுமே என்று குறிப்பிட்டு பேசினார்.